செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் சோட்டா ராஜன் கூட்டாளி கைது: சிறப்பு அதிரடிப்படை நடவடிக்கை

Published On 2017-07-22 11:28 GMT   |   Update On 2017-07-22 11:28 GMT
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறப்பு அதிரடி படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் சோட்டா ராஜன் கூட்டாளி கைது செய்யப்பட்டான்.
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோ நகரில் சோட்டா ராஜனின் கூட்டாளி பதுங்கி இருப்பதாக சிறப்பு அதிரடிப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இன்று அதிரடி படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, தலைநகரில் பதுங்கியிருந்த கான் முபாரக் என்பவரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் இருந்து இரு துப்பாக்கிகள், 3 பிஸ்டல்கள், நாட்டு துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், ‘மும்பையை சேர்ந்த பிரபல தாதா சோட்டா ராஜன் கும்பலை சேர்ந்தவன் கான் முபாரக். இவர் துப்பாக்கி சுடுதலில் சிறந்தவர். இவர்மீது அலகாபாத் மற்றும் அம்பேத்கர்நகர் மாவட்டங்களில் 22-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன’ என தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News