செய்திகள்

கள்ளச் சந்தையில் கிடைக்கும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான ஓவியங்கள்

Published On 2017-07-22 10:58 GMT   |   Update On 2017-07-22 10:58 GMT
ஏர் இந்தியா நிறுவனம் தங்களுக்குச் சொந்தமான ஓவியங்கள் கள்ளச் சந்தையில் கிடப்பதாக வந்த தகவலை அடுத்து அதற்கு காரணமான முன்னாள் ஊழியர்களின் பெயர் பட்டியலை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

ஏர் இந்தியா நிறுவனம் தங்களது ஓவியத் தொகுப்பிலிருந்து மூத்த அதிகாரிகளுக்கு ஓவியத்தை வழங்கி, வேலையிலிருந்து ஓய்வு பெரும் போது திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த காலங்களில் அப்படி வழங்கப்பட்ட ஓவியங்கள் இன்னும் திருப்பி தரப்படாததால் அந்நிறுவனம் பெயர் பட்டியலை வெளியிடப் போவதாக அறிவித்தது. அதற்கான பெயர் பட்டியல் தயாராகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அந்நிறுவனத்தின் அதிகாரி கூறுகையில், ‘ஓவியத்தை பெற்றவர்கள் திருப்பி தந்துவிட்டால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. இல்லையெனில் அவர்கள் பெயர்கள் வெளியிடப்படும். அதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.

மேலும் இந்த பிரச்சனை ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஒருவர் அனுப்பிய கொரியர் மூலம் தொடங்கியது. அதில் இந்நிறுவனத்தில் இருந்து காணாமல் போன, ஓவியர் ஜஸ்டின் தாஸ் வரைந்த ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன.

இது குறித்து நடைபெற்ற விசாரணையில் காணாமல் போன ஓவியங்கள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து தான் ஓவியங்கள் அனைத்தையும் திருப்பி தருமாறு அந்நிறுவனம் முன்னாள் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News