செய்திகள்

பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடன் சோனியா-ராகுல் தொலைபேசியில் பேச்சு: ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர்

Published On 2017-07-12 09:52 GMT   |   Update On 2017-07-12 09:52 GMT
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இன்று பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, துணை ஜனாதிபதி தேர்தலில் காந்தியின் பேரனுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
பாட்னா:

துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்திற்கு, பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் ஆதரவு தெரிவித்தார்.

இது காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்ட நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் கோபாலகிருஷ்ண காந்திக்கு நிதிஷ் குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.



இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நிதிஷ் குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு துணை ஜனாதிபதி தேர்தலில் கோபாலகிருஷ்ண காந்திக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

இந்த தகவலை ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News