search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொலைபேசி"

    • மழை, வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்க கூடாது.
    • உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரி வித்துக் கொள்ளப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்து ள்ள செய்தி குறி ப்பில் கூறியிருப்பதாவது வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று முதல் 4-ந் தேதி வரை கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையத்தால் தெரிவிக்கப்ப ட்டுள்ளது. எனவே கனமழை தொடர்பாக பொதும க்களுக்கு கீழ்க்க ண்ட முன்னெச்சரிக்கை அறிவு ரைகள் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் கனமழை  காலங்களில், பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும், இடிமின்னலுடன் கனமழை பெய்துவரும் போது திறந்த வெளியில் நிற்பதையும், நீர்நிலைகளில் குளிப்பதையும், மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மழை, வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்க கூடாது. வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இட ங்களுக்கு செல்லவேண்டும்.

    பொதுமக்கள் தங்களது ஆதார், குடும்பஅட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில்,பொதுமக்கள் டார்ச்லைட், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது. கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில், பேரிட ர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ள 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களும் செயல்பட்டு வருகிறது. கட்டணமில்லா தொலைபேசிஎண் - 1077மற்றும் 04142 - 220700, 04142 - 233933மேற்படி தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிட ர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். மே ற்படி பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு நேர டியாக தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரி வித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • அரியலூர் மாவட்டத்தில் பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலை பேசி எண்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது
    • பேரிடர் கட்டுப்பாட்டு அறையினை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆய்வு செய்தார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் வாட்ஸ்-அப் எண் 9384056231 ஆகியவற்றின் மூலம் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவித்த புகார்கள், தொலைக்காட்சி செய்திகளில் வரப்பெற்ற புகார்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    மேலும் வடகிழக்கு பருவமழை தொடர்பான அனைத்து புகார்கள் குறித்தும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட துறை அலுவல்களுக்கு உடனுக்குடன் தெரிவித்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    மேலும் பேரிடர் தொடர் பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் தொலை பேசி எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி மாவட்ட கட்டுப்பாட்டு அறையை 1077 மற்றும் 04329-228709 என்ற தொலை பேசி எண்களிலும், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் 04329- 222058 , உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் 04331-245352, அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் 04329-222062, ஜெய ங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகம் -04331-250220, செந்துறை வட்டாட்சியர் அலுவலகம் 04329-242320 மற்றும் ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகம் 04331-299800 என்ற தொலை பேசி எண்களிலும் 9384056231 என்ற வாட்ஸ்- அப் எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    இந்த புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) சந்திரசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • 155330 எனும் தொலைபேசி எண் சேவை மையம் தமிழ் நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மகளிர் மேம் பாட்டு நிறுவனத்தின் கீழ் மகளிர் வாழ்வாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் , தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தீன்தயாள் உபாத்யாய கிரா மின் கவுசல்ய யோஜனா (கிராமப்பபுற திறன் பயிற்சி) போன்ற அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எழும் வினாக்கள், தகவல்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக 155330 எனும் தொலைபேசி எண் சேவை மையம் தமிழ் நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த அழைப்பு மையம் அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படும். தமிழகத் தின் எந்த பகுதியில் இருந்தும் தொலைபேசி அல்லது கைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு திட்ட விவரங்களை எவ்வித கட்டணமும் இன்றி பெற முடியும்.

    குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சுய உதவிக்குழுக்கள் அமைத்தல், வங்கி கடன் உதவி பெறுதல், சுழல் நிதி பெறுதல், பயிற்சி கள், கணக்கு பராமரிப்பு, வாழ்வாதாரம் தொடர்பான திட்ட விவரங்கள், சுய உதவிக்குழுக்கள் மூலம் குழுவாக தொழில் தொடங்கு தல், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல் ஆகியன குறித்தும் விளக்கங்கள் பெறலாம்.

    மேலும், 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளை ஞர்கள் சுயதொழில் மேற்கொள்ள ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறு வனங்கள் மூலம் வழங்கப் படும் பயிற்சிகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம். அதேபோல் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு பெற விரும்பும் கிராமப்புற இளைஞர்கள், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறுகிய கால பயிற்சிகள், பயிற்சி மையங் கள், தகுதிகள், பயிற்சியின் போது வழங்கப்படும் வசதிகள் ஆகியன குறித்தும் தகவல்கள் பெறலாம்.

    எனவே பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள் 155330 அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டு உரிய தகவல்களை பெற்று பயன டையலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • சென்னை குடிநீர் வாரிய தொலைபேசி எண் 044-2845 1300, கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1916 மற்றும் 14420 செயல்படாது.
    • கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் வழக்கம்போல் செயல்படும்.

    சென்னை:

    பி.எஸ்.என்.எல். வலைதள பராமரிப்பு பணிகள் இன்று மாலை 3 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளதால் சென்னை குடிநீர் வாரிய தொலைபேசி எண் 044-2845 1300, கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1916 மற்றும் 14420 செயல்படாது.

    மேலும் மற்ற இணையதள சேவைகள் மற்றும் தலைமை அலுவலக கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் வழக்கம்போல் செயல்படும். கூடுதல் விவரங்களுக்கு 4567 4567 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    • அரசு கேபிள் இணைப்பு எண்ணிக்கையை உயர்த்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
    • 3 மடங்கு அதிக வேகத்துடன் பைபர் நெட் இணைப்பு வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    மத்திய, மாநில அரசு திட்டம் வாயிலாக அரசு கேபிள் டி.வி., நிறுவனம் சார்பில், பைபர் நெட் இணைப்பு வழங்கப்பட உள்ளது. கேபிள் வாயிலாக இணையதள சேவை வழங்கும் திட்டத்தில் ஒரு இணைப்பு பெற்ற சந்தாதாரர், டி.வி., தொலைபேசி மற்றும் இணையதளம் என 3 சேவைகளையும் பெறலாம். இணையதள சேவை வேண்டாம் எனில் டி.வி., ஒளிபரப்பு சேவையை மட்டும் பெற்றுக்கொள்ளலாம்.

    அரசு கேபிள் இணைப்பு எண்ணிக்கையை உயர்த்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. திருப்பூர் கேபிள் தாசில்தார் ரவீந்திரன், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தாலுகாக்களில் அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து கலந்தாய்வு நடத்தினார்.

    இது குறித்து தாசில்தார் கூறியதாவது:- நடைமுறையில் உள்ளதை காட்டிலும் 3 மடங்கு அதிக வேகத்துடன் பைபர் நெட் இணைப்பு வழங்கப்பட உள்ளது.புதிய பைபர் நெட் சேவையை பெற அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் பயன்படுத்துபவராக இருக்க வேண்டும். பைபர் நெட் திட்டம் வந்த பிறகு அரசு கேபிள் இணைப்புகளை அதிகரிக்க சிரமம் ஏற்படும்.

    எனவே நெட் இணைப்பு சேவை வழங்க விரும்பும் கேபிள் ஆபரேட்டர்கள் முன்கூட்டியே அரசு செட்டாப் பாக்ஸ் பெற்று ஒளிபரப்பை துவக்க வேண்டும். பயன்படுத்தாமல் உள்ள செட்டாப் பாக்ஸ்களையும், முழு பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.அரசு கேபிள் சேவை கிடைக்காத பகுதியில் புதிய நெட் சேவை தேவைப்பட்டால் புதிய ஆபரேட்டரை உருவாக்கி சேவையை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், அடுத்த தவணையை தொடர்ந்து பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண்ணை வருகிற 15-ந் தேதிக்குள் இணைத்து, பி.எம் கிசான் இணைய தளத்தில் இ-கே.ஒய்.சி செய்வது அவசியம்.
    • அஞ்சலகங்கள், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி ஆதாருடன், தொலை பேசி எண்ணை இணைத்து பயன்பெறலாம். இந்த சேவைக்கு ரூ.50 கட்டணமாக பெறப்படுகிறது.

    சேலம்:

    மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், அடுத்த தவணையை தொடர்ந்து பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண்ணை வருகிற 15-ந் தேதிக்குள் இணைத்து, பி.எம் கிசான் இணைய தளத்தில் இ-கே.ஒய்.சி செய்வது அவசியம். எனவே அருகில் அஞ்சலகங்கள், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி ஆதாருடன், தொலை பேசி எண்ணை இணைத்து பயன்பெறலாம். இந்த சேவைக்கு ரூ.50 கட்டணமாக பெறப்படுகிறது.

    மேலும் அஞ்சல் துறையின் கீழ் செயல்பட்டு வரும், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன் இணைந்து போஸ்ட் மேன் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலம் ஆதாருடன் தொலைபேசி எண் இணைத்தல், திருத்தம் மற்றும் 5 வயத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் பதிவு செய்தல் ஆகிய 2 வகையான ஆதார் சேவைகளையும் வழங்கி வருகிறது என சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
    • இலவச தொலைபேசி எண்ணான 18005993540-ஐ தொடர்பு கொள்ளலாம்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் பயனடையும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழ கத்தினால் அந்தந்த மாவட்டங்களில் இந்திய அரசின் பரவ லாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் நலன் கருதி ஏற்கனவே நடைமுறையில் இருந்த அதாவது அடுத்த மாதம் அக்டோபர் 1-ந் தேதி திறக்கப்பட இருந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை முன்கூட் டியே செப்டம்பர் 1-ந்தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத் தில் நடப்பாண்டு 2022-2023-ல் கன்னிப்பூ கொள்முதல் பருவத்தில் தற்சமயம் 7 நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறக் கப்பட்டுள்ளன. இதனை விவசா யிகள் பயன்படுத்தி நெல் விற்பனை செய்ய லாம். நெல் கொள்முதல் நிலை யங்கள் செயல்பாடுகள் தொடர்பாக ஏதேனும் குறைபாடோ, புகாரோ இருப்பின் நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக இலவச தொலைபேசி எண்ணான 18005993540-ஐ தொடர்பு கொள்ளலாம்.

    மேலும், கட்டுப்பாடு அறை எண்கள் 04652 261214, மாவட்ட கலெக்டர் அலுவலக வாட்ஸ் அப் எண் 9154154598 ஆகியவற்றில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிக்குள் புகார் தெரிவிக்கலாம். விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகள் மற்றும் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு செய்யப்படும். அனைத்து விவசாயிகளும் ஒத்துழைப்பு நல்கிடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு மண்டல மேலாளர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சிறு தொழில் மையம், கோணம், நாகர்கோவில்-4 அலுவலக தொலைபேசி எண்.04652-251214-ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    ×