செய்திகள்

போர் களமான டார்ஜிலிங் தெருக்களில் அமைதி தூது வரும் பௌத்த பெண் துறவி

Published On 2017-06-25 11:48 GMT   |   Update On 2017-06-25 11:48 GMT
தனிமாநில கோரிக்கைக்காக போராட்டங்கள் வலுத்து வரும் டார்ஜிலிங் நகரின் தெருக்களி,ல் பௌத்த பெண் துறவி ஒருவர் அமைதியை வலியுறுத்தி வலம் வருகிறார்.
டார்ஜிலிங்:

மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளை பிரித்து கூர்காலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் அமைக்கக்கோரி கூர்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜி.ஜே.எம்.) அமைப்பினர் கடந்த 12-ந்தேதி முதல் காலவரையற்ற முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதுடன், அங்கு அடிக்கடி வன்முறையும் வெடித்து வருகிறது. இதில் ஏராளமான போலீசார் மற்றும் பொதுமக்கள் காயமடைந்து உள்ளனர். 

டார்ஜிலிங் நகரில் 11 நாட்களை கடந்து போராட்டம் இன்றும் நீடித்தது. தெருக்களில் மக்கள் பேரணியாக சென்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். 



இந்நிலையில், போராட்ட களமாக விளங்கும் டார்ஜிலிங் நகரின் தெருக்களில் கஜுனி என்ற பௌத்த பெண் துறவி ஒருவர் அமைதியை வலியுறுத்தி வலம் வருகிறார்.

தனது போராட்டம் குறித்து கஜுனி கூறுகையில், மக்கள் அமைதியான வழியில் போராட வேண்டும். மேற்குவங்காள அரசும் போராட்டக்காரர்கள் துன்புறுத்த கூடாது என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News