செய்திகள்

தீவிரவாத மிரட்டலுக்கு இடையே பிரதமர் மோடி கேரளா வந்தார்: டி.ஜி.பி. தகவல்

Published On 2017-06-21 07:55 GMT   |   Update On 2017-06-21 07:55 GMT
கடந்த 17-ந்தேதி தீவிரவாத மிரட்டலுக்கு இடையே பிரதமர் மோடி கேரளா வந்ததாக அம்மாநில போலீஸ் டி.ஜி.பி. சென்குமார் தெரிவித்தார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொச்சியை அடுத்த புதுவைபி அருகே இந்தியன் ஆயில் நிறுவனத்தின் குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மெட்ரோ ரெயில் திறப்பு விழாவுக்காக பிரதமர் மோடி கடந்த 17-ந்தேதி கேரளா வந்தார்.

அப்போது கொச்சி புதுவைபியில் போராட்டம் தீவிரமடைந்தது. போராட்டக்கரரர்களை அப்புறப்படுத்த போலீசார் தடியடியில் ஈடுபட்டனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது.

போலீசாரின் தடியடிக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். தடியடியில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக நேற்று கேரள போலீஸ் டி.ஜி.பி சென்குமார், கொச்சிக்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



கடந்த 17-ந்தேதி பிரதமர் மோடி, கேரளா வந்தார். அப்போது அவருக்கு தீவிரவாத மிரட்டல் இருந்தது. இதனை நாங்கள் அப்போது வெளிப்படுத்தவில்லை. மாறாக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்தோம். அப்போதுதான் போராட்டக்காரர்கள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை பயன்படுத்தி தீவிரவாதிகள் ஊடுருவாமல் இருக்கவே போலீசார் பலப் பிரயோகம் நடத்தினர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News