செய்திகள்

போன் மூலம் முத்தலாக் கொடுத்து சவுதிஅரேபிய ஷேக்குக்கு மனைவியை விற்ற கணவன்

Published On 2017-05-29 10:38 GMT   |   Update On 2017-05-29 10:38 GMT
சவுதி அரேபிய ஷேக்குக்கு மனைவியை விற்ற கணவன், தொலைபேசியின் மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தார்.
ஐதராபாத்:

ஐதராபாத்தை சேர்ந்தவர் சாய்ராபானு (வயது 23). இவரது கணவர் ஒமர் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 17-ந்தேதி இவர்களுக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.

காதலித்து திருமணம் செய்த ஒமர் பின்னர் மனைவியை தனது குடும்பத்தாருடன் சேர்ந்து சித்ரவதை செய்தார்.

இதற்கிடையே சாய்ரா பானுவை சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்கு ஆள் தேவை என்று ஒமர் ஏஜெண்டு மூலம் அனுப்பினார். மனைவியை அவர் திட்டமிட்டு மஸ்கட் வழியாக ரியாத்துக்கு ஏஜெண்டு மூலம் கடத்தியுள்ளார்.

ரியாத்தில் உள்ள ஷேக் வீட்டில் வேலை பார்த்த போது அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து கணவரிடம் கேட்ட போது உன்னை ஷேக்குக்கு விற்று விட்டேன். இப்போதே உன்னை விவாகரத்து செய்கிறேன் என்று போனில் முத்தலாக் கூறி ஒமர் விவாகரத்து செய்துள்ளார்.

இந்த தகவலை சவுதியில் உள்ள சாய்ராபானு ஐதராபாத்தில் உள்ள பானுபேகத்திடம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து ஐதராபாத் போலீசில் புகாராக கொடுத்து உள்ளார். தனது மருமகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார்.

சவுதி அரேபியாவில் பரிதவிக்கும் தனது மகளை மீட்க உதவ வேண்டும் என்று பானுபேகம் மத்திய உள்துறை மந்திரி சுஷ்மா சுவராஜிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது மகளை மருமகன் விற்று விவாகரத்து செய்துள்ளார். அவரை மீட்டு தர வேண்டும் என்று சுஷ்மாவுக்கு அனுப்பிய வீடியோ பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

Similar News