செய்திகள்

கேரள முன்னாள் முதல்-மந்திரி அச்சுதானந்தன் உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2017-05-29 05:32 GMT   |   Update On 2017-05-29 05:32 GMT
கேரள முன்னாள் முதல்-மந்திரியும் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தனுக்கு தீடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரள முன்னாள் முதல்-மந்திரியும் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தனுக்கு தற்போது 94 வயது ஆகிறது. இந்த வயதிலும் அவர், தினமும் அதிகாலையில் எழுந்து 4 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். மேலும் யோகா பயிற்சியிலும் ஈடுபடுவார்.

நேற்று காலை அவர், நடைபயிற்சிக்காக எழுந்தபோது, அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர், திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிற்பகலில் அவர், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இதுபற்றி டாக்டர்கள் கூறும்போது, அச்சுதானந்தனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. மேலும் ரத்த அழுத்தமும் அதிகமாக இருந்ததால் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர், தற்போது நலமாக உள்ளார். 2 நாட்களில் அவர், வீடு திரும்பலாம் என்றனர்.
Tags:    

Similar News