செய்திகள்

அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் தினம் ஒரு மணி நேரம் மக்களை சந்திக்க வேண்டும் - டெல்லி முதல்வர்

Published On 2017-05-24 19:44 GMT   |   Update On 2017-05-24 19:44 GMT
டெல்லி மாநிலத்தில் அமைச்சர்கள், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் வரும் ஜூன் மாதம் முதல் தினமும் ஒரு மணி நேரம் மக்களை சந்தித்து குறை கேட்க வேண்டும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி:

டெல்லி மாநிலத்தில் அமைச்சர்கள், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் வரும் ஜூன் மாதம் முதல் தினமும் ஒரு மணி நேரம் மக்களை சந்தித்து குறை கேட்க வேண்டும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

தேசிய தலைநகர அந்தஸ்து கொண்ட டெல்லி மாநிலத்தின் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் அரசு செயல்பட்டு வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு இங்கு கடந்த 2015-ம் ஆண்டு ஆட்சியமைத்தது. கடந்த மாதம் நடைபெற்ற மாநகராட்சி தேர்தல் முடிவுகள் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவை தந்துள்ளது. இதனால், அம்மாநிலத்தில் மீண்டும் மக்கள் செல்வாக்கை பிடிக்க அக்கட்சி முடிவெடுத்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக வரும் ஜூன் மாதம் முதல் அம்மாநில முதல்வர், மந்திரிகள், ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் மற்றும் அதிகாரிகள் தினமும் ஒரு மணி நேரம் (காலை 10 மணி முதல் 11 மணி வரை) மக்களை சந்தித்து குறை கேட்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். மக்களுக்கும் அரசுக்கும் உள்ள இடைவெளியை இது குறைக்கும் என அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

அரசு அலுவலகங்களில் மொத்தமாக குறை தீர்ப்பு கூட்டங்கள் நடத்தப்படுவதால் கூட்டம் முண்டியடிக்கிறது. இதனால், அந்தந்த அலுவலகங்களில் தனித்தனியே கூட்டம் நடத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News