செய்திகள்

ஒரே ஒரு டுவீட் - கடத்தப்பட்ட நான்கு சிறுவர்களை உடனடியாக மீட்ட ஒரிசா போலீஸ்

Published On 2017-05-23 23:28 GMT   |   Update On 2017-05-23 23:29 GMT
ஒரிசா மாநிலத்தில் சாமானியர் ஒருவர் பதிவு செய்த ஒரு டுவீட்டால் கொத்தடிமை வேலைக்கு கடத்தப்பட்ட நான்கு சிறுவர்கள் உடனடியாக மீட்கப்பட்டுள்ளனர்.
புபனேஷ்வர்:

ஒரிசா மாநிலத்தில் சாமானியர் ஒருவர் பதிவு செய்த ஒரு டுவீட்டால் கொத்தடிமை வேலைக்கு கடத்தப்பட்ட நான்கு சிறுவர்கள் உடனடியாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஒரிசா மாநிலம் கஞ்சாம் மாவட்டத்தைச் சேர்ந்த அமித் நந்தா என்பவர் நேற்று, சம்பல்பூர் செல்லும் பேருந்தில் நான்கு சிறுவர்கள் வல்லுக்கட்டாயமாக கொண்டு செல்லப்படுகின்றனர். அனேகமாக, அவர்கள் கொத்தடிமைகளாக கொண்டு செல்லப்படலாம் என அம்மாநில முதல்வர் அலுவலகத்தின் முகவரிக்கு டுவிட்டர் மூலம் புகார் அனுப்பினார்.

அமித் நந்தாவின் புகாரை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல், அம்மாநில போலீசார் தீவிரமாக செயல்பட்டு குறிப்பிடப்பட்ட இடத்தை முற்றுகையிட்டு சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது, புல்பானி என்ற இடத்தின் அருகே நான்கு சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதோடு, கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரின் அதிரடி நடவடிக்கையையும், புகாரளித்த அமித் நந்தாவையும் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பாராட்டியுள்ளார்.
Tags:    

Similar News