செய்திகள்

மோடியை விட மன்மோகன் சிங் தான் அதிக நாடுகளில் சுற்றியுள்ளார்: அமித்ஷா

Published On 2017-05-04 12:42 GMT   |   Update On 2017-05-04 12:42 GMT
பிரதமர் நரேந்திர மோடியை விட மன்மோகன் சிங் தான் அதிக நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் என்று பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
சிம்லா:

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்றார். மோடி பதவியேற்றது முதல் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதனால், பிரதமர் மோடி உள்நாட்டில் இருப்பதை விட வெளிநாடுகளில் தான் அதிகம் உள்ளார் என்று எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை விட மன்மோகன் சிங் தான் அதிக நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் என்று பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.



இது தொடர்பாக ஹிமாச்சல பிரதேசம் பளம்பூர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் அமித்ஷா பேசுகையில், ”நம்முடைய எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் புள்ளி விவரங்கள் படி நரேந்திர மோடியை விட மன்மோகன் சிங் தான் அதிக நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்” என்று கூறினார்.
Tags:    

Similar News