செய்திகள்

தமிழக விவசாயிகளை போல அரை நிர்வாணம் - மண்டை ஓட்டுடன் கேரள விவசாயிகள் போராட்டம்

Published On 2017-04-29 06:35 GMT   |   Update On 2017-04-29 06:35 GMT
தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டத்தை போன்று கேரள மாநிலம் பாலக்காடு நகரில் இன்று காலை பாலக்காடு விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
கொழிஞ்சாம்பாறை:

விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டம் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது.


தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டத்தை போன்று கேரள மாநிலம் பாலக்காடு நகரில் இன்று காலை பாலக்காடு விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் இடுப்பில் பச்சை துண்டு கட்டி கழுத்தில் மண்டை ஓட்டை மாட்டிக்கொண்டு போராட்டம் நடத்தினர்.

விவசாய சங்கத்தலைவர் வேணுகோபால் கூறும்போது, கடந்த 2 வருடமாக இந்த பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாய பயிர்கள் கருகி அழிந்து விட்டது. எனவே விவசாயத்திற்காக வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆழியாற்றில் இருந்து சித்தூர் பகுதிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கோரிக்கை குறித்து கோ‌ஷம் எழுப்பியவாறு பாலக்காடு நகர் முழுவதும் விவசாயிகள் ஊர்வலமாக சென்றனர்.

Tags:    

Similar News