செய்திகள்

8 மணி நேரத்தில் 95௦ டிக்கெட்டுகள் விற்ற டிக்கெட் விற்பனையாளருக்கு ரெயில்வே விருது

Published On 2017-01-21 13:29 GMT   |   Update On 2017-01-21 13:29 GMT
சுமூகமான செயல்பாடு மற்றும் சுத்தம் ஆகியவற்றை கடைபிடித்ததற்காக மதுரா ரெயில் நிலையத்திற்கு விருதுகள் வழங்குவதாக வடக்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரா:

வடக்கு ரெயில்வேயின் முக்கிய ரெயில் நிலையங்களில் மதுரா ரெயில் நிலையமும் ஒன்று. தினசரி நூற்றுக்கணக்கான ரெயில்கள் இந்த வழியாக வந்து செல்கின்றன.

இந்நிலையில் சுமூகமான ரெயில்வே செயல்பாடு மற்றும் ரெயில் நிலையத்தை தூய்மையாக வைத்திருந்தது போன்ற காரணங்களுக்காக மதுரா ரெயில் நிலைய பணியாளர்களுக்கு பண விருதுகள் வழங்குவதாக வடக்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சுமூகமான செயல்பாடு மற்றும் சுத்தம் ஆகியவற்றுக்காக வடக்கு ரெயில்வே நிர்வாக இயக்குனர் அருண் செக்சேனா தலா ரூ.5௦௦௦ வழங்கியதாக ரெயில் நிலைய இயக்குனர் என்.பி.சிங் தெரிவித்தார்.

இதுபோல 8 மணி நேரத்தில் 95௦ டிக்கெட்டுகள் விற்பனை செய்த ஸ்ரீராம் மீனாவுக்கு விருது வழங்கப்படவுள்ளதாக சிங் தெரிவித்தார்.

அஜ்ஹாய் நிலையத்திலிருந்து மதுரா கோசி லைன் இடையிலான சேவைக்காக குழு விருது என்ற பெயரில் ரூ.5௦௦௦-மும், ரெயில் செயல்பாடுகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக எண் 538 என்ற ரெயில்வே கேட்டில் வேலை செய்த லால் பாபு ராய் என்பவருக்கும் விருது அளிக்கப்படவுள்ளது.

Similar News