உள்ளூர் செய்திகள்

திருச்சி உப்புலியபுரத்தில் மலை பாம்பு பிடிப்பட்டது

Published On 2022-09-21 09:20 GMT   |   Update On 2022-09-21 09:20 GMT
  • மாடுகளுக்காக வைத்திருந்த வைக்கோல் போரில் மலைப்பாம்பு அசைவதை கண்ட தனசேகர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவலளித்தார்.
  • வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 10 அடி நீளமும், 10 கிலோ எடையும் கொண்ட 2 வயது மலைப்பாம்பை பிடித்தனர்

திருச்சி,

திருச்சி மாவட்டம் உப்புலியபுரத்தை அடுத்துள்ள சோபனபுரத்தை சேர்ந்த தனசேகர் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் பூஞ்சோலையம்மன் கோயிலருகே உள்ளது.

இந்நிலையில் அங்கு மாடுகளுக்காக வைத்திருந்த வைக்கோல் போரில் மலைப்பாம்பு அசைவதை கண்ட தனசேகர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவலளித்தார்.

திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண்குமார் உத்தரவின் பேரில் துறையூர் வனசரகர் பொன்னுசாமி தலைமையில் இந்திய விலங்குகள் நல வாரிய மாநில அலுவலர் சோபனபுரம் இளங்கோவன், துறையூர் வனத்துறை வனவர் சியாம் சுந்தர் வனக்காப்பாளர் குமரவேல், வனக்காவலர் பாக்கியராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 10 அடி நீளமும், 10 கிலோ எடையும் கொண்ட 2 வயது மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் பிடிப்பட்ட மலைப்பாம்பு பச்சைமலை மூன்றாது கொண்டை ஊசி வளைவில் உள்ள காப்புக்காட்டில் பத்திரமாக விடப்பட்டது.

Tags:    

Similar News