உள்ளூர் செய்திகள்

முசிறியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவமுகாம்

Published On 2022-08-12 10:28 GMT   |   Update On 2022-08-12 10:28 GMT
  • செவந்தாலிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை களில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
  • கண் பரிசோதனை செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக 2 நபரும், இதய சிகிச்சைக்காக இரண்டு நபரும் மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்தனர்.

திருச்சி :

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த செவந்தாலிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை களில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.

முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் நகர மன்ற தலைவர் கலைச்செல்வி சிவக்குமார் செவந்த லிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா சதீஷ் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்து முகாமை துவக்கி வைத்தனர்.

முகாமில் அரசு மருத்துவர்கள் மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவ குழுவினர்கள் வருகை தந்து இலவச பரிசோதனையையும் தமிழக அரசின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சையும் அளித்தனர். இசிஜி, ஸ்கேன், சிறுநீர், ரத்த பரிசோதனைகள் மற்றும் 30 கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு ஸ்கேன் பரிசோதனைகளும் செய்யப்பட்டன.

கண் பரிசோதனை செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக 2 நபரும், இதய சிகிச்சைக்காக இரண்டு நபரும் மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்தனர். மொத்தம் 1043 பயனாளிகள் பயனடைந்தனர்.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் நரேந்தர், வட்டார சுகாதார ஆய்வாளர் இளங்கோவன், சுகாதார ஆய்வாளர் கார்த்திக், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Tags:    

Similar News