உள்ளூர் செய்திகள்

மனு கொடுக்க வந்த பா.ஜ.க.வினர். 

கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் மனு

Published On 2022-06-13 10:05 GMT   |   Update On 2022-06-13 10:05 GMT
  • குருவாயூரப்பன் நகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
  • இரவு நேரங்களில் சமூக விரோத குற்ற செயல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருப்பூர்:

பாரதிய ஜனதா கட்சியின் நெருப்பெரிச்சல் மண்டலம் சார்பில்நிர்வாகிகள் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நெருப்பெரிச்சல் பழைய வார்டு எண் 18, வாவிபாளையம் பகுதியிலிருக்கும்குருவாயூரப்பன் நகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த பகுதியில் மாநகராட்சி சமுதாய கழிப்பிட கட்டிடம் கட்டப் பட்டு 8 ஆண்டுகள்ஆகியும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமலும் கட்டிடம் சேதம் அடைந்துவருகிறது. இரவு நேரங்களில் சமூக விரோத குற்ற செயல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எனேவ குருவாயூரப்பன் நகரில் அமைந்துள்ள மாநகராட்சிசமுதாய கழிப்பிடத்தை செயல் பாட்டுக்குக் கொண்டுவர பொதுமக்களின் சிரமத்தைபோக்கும் விதமாக தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News