உள்ளூர் செய்திகள்
மேயர் தினேஷ்குமாரிடம் காசோலை வழங்கிய காட்சி.

பள்ளி மாணவர்கள் சார்பில் புற்றுநோய் சிகிச்சை மைய கட்டிட பணிக்கு நிதி உதவி

Published On 2023-04-30 05:00 GMT   |   Update On 2023-04-30 05:00 GMT
  • நிர்வாக இயக்குநர் கோவிந்தராஜன் மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  • நமக்குநாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன்உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது.

திருப்பூர்:

நமக்குநாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன்உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரிடம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்படவுள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு வீரபாண்டிப்பிரிவு விருக்ஷா சர்வதேசப் பள்ளியின் 70 மாணவ, மாணவிகள்ஒன்றிணைந்து, அவர்களின் சேமிப்பு தொகை மற்றும் சிறுபொருட்கள் விற்பனை மூலம் பங்களிப்பு தொகையாக ரூ.1.25 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்ரமணியம்,விருக்ஷா சர்வதேசப் பள்ளியின் தாளாளர் ராஜலட்சுமி, நிர்வாக இயக்குநர் கோவிந்தராஜன் மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News