உள்ளூர் செய்திகள்

 முக கவசம் அணிவது கட்டாயம் என்ற பதாகை ஒட்டப்பட்டுள்ள காட்சி.

கொரோனா தொற்று பரவுவதால் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு முக கவசம் அணியாமல் செல்ல தடை

Published On 2023-04-01 10:41 GMT   |   Update On 2023-04-01 10:41 GMT
  • தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.
  • முக கவசம் அணிவது கட்டாயம் என்ற பதாகை ஒட்டப்பட்டுள்ளது.

திருப்பூர் :

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதனையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் , செவிலிய ர்கள் மருத்துவமனைக்கு வரும் உள் மற்றும் புற நோயாளிகள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இன்று முதல் நடைமுறைக்கு வந்ததை முன்னிட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வளாகம் முழுவதும் முக கவசம் அணிவது கட்டாயம் என்ற பதாகை ஒட்டப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவம னைக்கு வரும் பொதுமக்க ளிடம் முக கவசம் அணிவது கட்டாயம் எனவும், முக கவசம் அணியாமல் வர தடை செய்யப்பட்டுள்ள தாகவும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரக்கூடிய நிலையில் பொதுமக்கள் அரசு மருத்து வமனை நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே திருப்பூர் மாவட்டத்தில் 18 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News