உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது பெற விண்ணப்பிக்கலாம்

Published On 2022-07-09 11:51 GMT   |   Update On 2022-07-09 11:51 GMT
  • 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெயரை பள்ளி ஆசிரியர்கள் இணையதளத்தில் பதிவிட வேண்டும்.
  • வங்கி கணக்கு எண் பதிவிடும் போது, வங்கிக்கணக்கு மாணவரின் பெயரில் தனி கணக்காக இருக்க வேண்டும்.

திருப்பூர் :

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெயரை பள்ளி ஆசிரியர்கள் www.inspireawards-st.pov.in என்ற இணையதளத்தில் பதிவிட வேண்டும். உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் வகுப்புக்கு ஒருவர் என 5 பேர், நடுநிலைப்பள்ளிகள் ஒரு வகுப்புக்கு ஒருவர் என 3 பேரும் பதிவு செய்யலாம். கூடுதலாக பதிவு செய்தால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

வங்கி கணக்கு எண் பதிவிடும் போது, வங்கிக்கணக்கு மாணவரின் பெயரில் தனி கணக்காக இருக்க வேண்டும். வங்கிக்கணக்கு தொடர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும். கணக்கு எண், வங்கியின் பெயர், ஐ.எப்.எஸ்.சி., கோடு முதலியவற்றை பிழையின்றி குறிப்பிடுவது அவசியம்.இ-மெயில், செல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிடும் போது பள்ளி இ-மெயில், பள்ளி தலைமை ஆசிரியரின் செல்போன் எண்ணை தெளிவாக குறிப்பிடுவது அவசியம்.

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகள் பற்றிய தகவல் இந்த இ-மெயிலுக்கே அனுப்பப்படும். செப்டம்பர் 30-ந் தேதி வரை இணையதளத்தில் பதிவிடலாம். இந்த வாய்ப்பை அனைத்து பள்ளிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News