உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் எடை குறைவான ஒரு கோடி முட்டைகள் கொள்முதல்- கோழிப் பண்ணையாளர் சங்கம் முடிவு

Published On 2022-07-18 11:24 GMT   |   Update On 2022-07-18 11:24 GMT
  • பொதுவாக பண்ணைகளில் உரிய எடைக்கும் கீழ் குறைவாக உள்ள முட்டைகள் வெளிமாநிலம், மாவட்டங்களுக்கு அனுப்பப்படுவதில்லை.
  • எடை குறைவான ஒரு கோடி முட்டைகளைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

நாமக்கல்:

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டைகள் தேக்கத்தைக் கருத்தில் கொண்டு விலையில் மாற்றம் செய்யப்படாமல் ரூ.4.40-ல் நீடிக்கும் என்று பண்ணையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

பொதுவாக பண்ணைகளில் உரிய எடைக்கும் கீழ் குறைவாக உள்ள முட்டைகள் வெளிமாநிலம், மாவட்டங்களுக்கு அனுப்பப்படுவதில்லை. இதனால் அவை தேக்கம் அடைகின்றன.

இதையடுத்து எடை குறைவான ஒரு கோடி முட்டைகளைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அதன் தலைவர் சிங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப் பண்ணையாளர்களிடம் இருந்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் மூலம் 48 கிராம் முதல் 50 கிராம் எடையுடைய முட்டைகளை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நிர்ணய விலையான ரூ.4.40-ல் இருந்து 70 காசுகள் குறைவாகவும், 50 கிராம் முதல் 52 கிராம் எடையுடைய முட்டைகளை 60 காசுகள் குறைவாகவும், ஒரு முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், கறிக்கோழி விலை கிலோ ரூ.90 ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.95-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News