என் மலர்

  நீங்கள் தேடியது "Egg Price"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக பண்ணையாளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
  • முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 25 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.20-ஆக நிர்ணயிக்கப்பட்டது.

  நாமக்கல்:

  தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் தலைமையில் நடைபெற்றது.

  இதில், முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக பண்ணையாளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும், ஆடி மாதப் பிறப்பால் மக்களிடையே முட்டை நுகா்வு சரிந்துள்ளதாலும், பண்ணைகளில் முட்டைகள் தேக்கம் அதிகரித்து வருவதாலும் விலையில் மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

  அதனடிப்படையில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 25 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.20-ஆக நிர்ணயிக்கப்பட்டது.

  அதேபோல் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 71-ஆகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ. 95-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பொதுவாக பண்ணைகளில் உரிய எடைக்கும் கீழ் குறைவாக உள்ள முட்டைகள் வெளிமாநிலம், மாவட்டங்களுக்கு அனுப்பப்படுவதில்லை.
  • எடை குறைவான ஒரு கோடி முட்டைகளைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

  நாமக்கல்:

  நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டைகள் தேக்கத்தைக் கருத்தில் கொண்டு விலையில் மாற்றம் செய்யப்படாமல் ரூ.4.40-ல் நீடிக்கும் என்று பண்ணையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

  பொதுவாக பண்ணைகளில் உரிய எடைக்கும் கீழ் குறைவாக உள்ள முட்டைகள் வெளிமாநிலம், மாவட்டங்களுக்கு அனுப்பப்படுவதில்லை. இதனால் அவை தேக்கம் அடைகின்றன.

  இதையடுத்து எடை குறைவான ஒரு கோடி முட்டைகளைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அதன் தலைவர் சிங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப் பண்ணையாளர்களிடம் இருந்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் மூலம் 48 கிராம் முதல் 50 கிராம் எடையுடைய முட்டைகளை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நிர்ணய விலையான ரூ.4.40-ல் இருந்து 70 காசுகள் குறைவாகவும், 50 கிராம் முதல் 52 கிராம் எடையுடைய முட்டைகளை 60 காசுகள் குறைவாகவும், ஒரு முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், கறிக்கோழி விலை கிலோ ரூ.90 ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.95-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பண்ணை கொள்முதல் விலையாக ஒரு முட்டை 535 காசுகள் என இருந்த நிலையில் நேற்று மேலும் 15 காசுகள் உயர்ந்து 550 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.
  • இதனால் சில்லரை விற்பனை கடைகளில் 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  நாமக்கல்:

  நாமக்கல் மண்டலத்தில் தினமும் 5 கோடிக்கும் அதிகமாக முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

  முட்டை நுகர்வை பொருத்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு என்ற தனியார் அமைப்பு முட்டை கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது. இதன்படி நாமக்கல் மண்டலத்தில் (சென்னை தவிர தமிழகம் முழுவதும்) பண்ணை கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படுகிறது.

  பண்ணை கொள்முதல் விலையாக ஒரு முட்டை 535 காசுகள் என இருந்த நிலையில் நேற்று மேலும் 15 காசுகள் உயர்ந்து 550 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் சில்லரை விற்பனை கடைகளில் 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயம் நாமக்கல் முட்டை விலை வரலாற்றில் உச்சபட்ச விலை என்பதால் கோழிப்பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  அதே வேளையில் சில்லறை விற்பனை விலையில் ஒரு முட்டை ரூ.6 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில இடங்களில் ரூ. 6-க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. இது முட்டை விலை உயர்வு நுகர்வோரை அதிருப்தி அடைய செய்துள்ளது.

  இதனிடையே கோழி தீவனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதை சமாளிக்கவோ முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  இதுகுறித்து தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-

  கடந்த ஓராண்டாக கோழிப்பண்ணையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஒரு முட்டை உற்பத்திக்கான செலவு 400 காசுகளில் இருந்து 450 காசுகளாக அதிகரித்துள்ளது. தற்போது 550 காசாக நிர்ணயம் செய்யப்பட்டாலும் 515 காசு மட்டுமே கையில் கிடைக்கிறது.

  எனவே கோழிப்பண்ணைகளில் கோழிக்குஞ்சு விடுவது தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் முட்டை உற்பத்தி குறைந்துள்ளது. இதன் மூலம் நாள் தோறும் 5 கோடி முட்டை உற்பத்தி செய்து வந்த நிலையில் தற்போது 4.20 கோடி முட்டைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

  ஆண்டுதோறும் முட்டை உற்பத்தி 10 சதவீதம் உயரும் நிலையில் தற்போது 20 சதவீதம் குறைந்துள்ளது. உற்பத்தி குறைவு காரணமாக முட்டை கொள்முதல் விலை 600 காசுகள் வரை உயர வாய்ப்பு உள்ளது என்றார். பண்ணை கொள்முதல் விலை 600 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டால் சில்லறை விற்பனை கடைகளில் விலை மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  முட்டை கொள்முதல் விலை கடந்த 1-ந்தேதி (பைசாவில்) 480காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து 6-ம் தேதி 485 காசாகவும், 9-ந் தேதி 490 காசு, 11-ந்தேதி 495 காசு, 13-ந்தேதி 505 காசு, 16-ந் தேதி 510 காசு, 23-ந் தேதி 520 காசு, 25-ந் தேதி 535 காசு என ஏற்றம் கண்டு வந்த முட்டை விலை நேற்று மேலும் ஏற்றம் கண்டு 15 காசு அதிகரித்து 550 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.55-ஆக நிர்ணயிக்கப்பட்டது.
  நாமக்கல்:

  நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் முட்டை சராசரி விலை ரூ.5.09 ஆக இருந்தது. ஜூன் மாதத்தில் இதன் சராசரி ரூ.5.09 ஆகவும், ஜூலையில் ரூ.4.95 ஆகவும், ஆகஸ்டில் ரூ.4.35 ஆகவும், செப்டம்பரில் ரூ.4.39 ஆகவும், கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.4.32 ஆகவும் இருந்தது.

  தற்போது தீபாவளியை முன்னிட்டு முட்டை விலை உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் 18-ந்தேதியில் இருந்து 29-ந்தேதி வரை ரூ.4.35 ஆக இருந்த முட்டை விலை 30-ந்தேதி 10 காசுகள் உயர்ந்து ரூ.4.45 ஆனது.

  இந்த நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக பண்ணையாளர்களிடம் ஆலோசிக்கப்பட்டது. மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டும், தீபாவளி பண்டிகையையொட்டி இறைச்சி விற்பனை அதிகரிக்கும் என்பதால் முட்டை விலையில் மாற்றம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.55-ஆக நிர்ணயிக்கப்பட்டது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முட்டைக்கான விலையை நிர்ணயம் செய்ய தமிழக அரசு தனிக்குழு அமைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதில் 10 நாளில் முடிவு எடுப்பதாக அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. #TNGovernment #EggPrice
  சென்னை:

  சென்னை ஐகோர்ட்டில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அக்ரம் என்பவர் ஒரு வழக்கு தாக்கல் செய்து உள்ளார். அந்த வழக்கில் அவர் கூறி இருப்பதாவது:-

  நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கோழி முட்டை வாங்கி விற்பனை செய்யும் தொழிலை கடந்த 25 ஆண்டுகளாக செய்து வருகிறேன்.  பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு திட்டத்துக்கு, தமிழக அரசு நாள் ஒன்றுக்கு பல லட்சம் முட்டைகளை கொள்முதல் செய்து வருகிறது. ஆனால், இந்த முட்டைக்கு விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு என்ற தனியார் அமைப்புதான் நிர்ணயம் செய்கிறது.

  இந்த குழு, 1982-ம் ஆண்டு தனியார் முட்டை நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்பட்டது. ‘என் முட்டை, என் விலை, என் வாழ்க்கை’ என்ற வாசகத்துடன் உருவாக்கப்பட்ட இந்த குழு, நாடு முழுவதும் பல ஆயிரம் உறுப்பினர்களை கொண்டு உள்ளது.

  விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும் நெல், கரும்பு உள்ளிட்ட விவசாய பொருட்களுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்கிறது. அதுபோல, கோழி முட்டைக்கும் தமிழக அரசே விலையை நிர்ணயம் செய்யவேண்டும் என்று கூறி கடந்த ஜூலை 17-ந் தேதி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

  ஒரு முட்டையின் உற்பத்தி செலவு ரூ.2.75 ஆகும். ஆனால், ஒரு முட்டையின் விலை ரூ.4.50 என்று இந்த அமைப்பு நிர்ணயம் செய்கிறது. இதனால், முட்டை வியாபாரிகள் எல்லாம் அதிக லாபத்தை சம்பாதிக்கின்றனர்.

  எனவே, முட்டைக்கு நியாயமான விலையை நிர்ணயம் செய்ய ஒரு குழுவை அமைப்பதற்கு, தமிழ்நாடு கால்நடை, பால் மற்றும் மீன்வளத்துறையின் முதன்மை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

  இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல், “வழக்குதாரரின் கோரிக்கை மனுவை 10 நாட்களுக்குள் பரிசீலித்து தகுந்த முடிவினை தமிழக அரசு மேற்கொள்ளும்” என்று உத்தரவாதம் அளித்தார்.

  இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.  #TNGovernment #EggPrice
  ×