உள்ளூர் செய்திகள்

நெல்லை மாநகராட்சி பகுதியில் சொத்துவரி திருத்தத்திற்கான சுயமதிப்பீடு படிவத்தை 28-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்-கமிஷனர் தகவல்

Published On 2022-06-24 09:39 GMT   |   Update On 2022-06-24 09:39 GMT
  • நெல்லை மாநகராட்சியில் சொத்துவரி பொதுச்சீராய்வு கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்.
  • உரிய காலக்கெடுவிற்குள் சுயமதிப்பீடு படிவம் பூர்த்தி செய்து கொடுக்கப்படாத கட்டிடங்களில் மாநகராட்சியால் சொத்துவரி திருத்தம் மேற்கொள்ளப்படும்.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறை அரசாணை எண்.53 மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநர், சுற்றறிக்கை மற்றும் பொது ச்சீராய்வு குறித்த கால அட்டவணையில் கண்டுள்ள வழிகாட்டுதலின்படியும், நெல்லை மாநகராட்சியில் சொத்துவரி பொதுச்சீராய்வு கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலாக்கப்பட உள்ளது.

இவ்வகைக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன்படி, பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கு சொத்துவரி திருத்தம் மேற்கொள்ளும் வகைக்குரிய சொத்துவரி சுயமதிப்பீட்டு படிவத்தினை தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், நெல்லை மைய அலுவலகம் மற்றும் அனைத்து கணினி வரிவசூல் மையங்களிலும், அலுவலக வேலை நாட்களில் பெற்று பூர்த்தி செய்து வருகிற 28-ந் தேதி மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ அனுப்பி வைக்க தெரிவிக்கப்படுகிறது.

உரிய காலக்கெடுவிற்குள் சுயமதிப்பீடு படிவம் பூர்த்தி செய்து கொடுக்கப்படாத கட்டிடங்களில் மாநகராட்சியால் சொத்துவரி திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News