உள்ளூர் செய்திகள்

தேசிய கொடி விற்பனையை பாவூர்சத்திரம் தபால் நிலைய அதிகாரி ஜெயக்குமார் தொடங்கி வைத்த காட்சி.


பாவூர்சத்திரம் தபால் நிலையத்தில் தேசிய கொடி விற்பனை தொடக்கம்

Published On 2022-08-06 09:22 GMT   |   Update On 2022-08-06 09:22 GMT
  • 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் வீடுகளில் தேசியக் கொடி களை ஏற்ற பிரதமர் மோடி மக்களை கேட்டுக் கொண்டார்.
  • தபால் நிலையங்களில் தேசியக் கொடிகள் தேவைப் படுவோர் பணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தென்காசி:

75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் வீடுகளில் தேசியக் கொடி களை ஏற்ற பிரதமர் மோடி மக்களை கேட்டுக் கொண்டார். மேலும் தபால் நிலையங்களில் தேசியக் கொடிகள் தேவைப் படுவோர் பணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி இந்திய தேசிய கொடிகள் தற்பொழுது தபால் நிலையங்களில் விற்பனைக்கு வந்துள்ளன. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் தபால் நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் தேசியக்கொடியை ரூ.25 செலுத்தி ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

இந்த விற்பனையை பாவூர்சத்திரம் தபால் நிலைய அதிகாரி ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். அதனை தென்காசி யூனியனுக்கு உட்பட்ட சில்லரைபுரவு ஊராட்சி மன்ற தலைவர் குமார் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் தபால் நிலைய அலுவலர்கள் ஜோதி, சுகுணா மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் தேசிய க்கொடிகள் யாருக்கேனும் தேவைப்பட்டால் அந்தந்த பகுதி தபால்காரரை அணுகி பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News