உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரத்தில் மாவட்டச் செயலாளர் முனியசாமி தலைமையில், நகரச் செயலாளர் பால்பாண்டியன் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் கைது

Published On 2022-10-20 08:01 GMT   |   Update On 2022-10-20 08:01 GMT
  • சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் கைது செய்தனர்.
  • இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராமநாதபுரம்

தமிழக சட்டசபை கூட்டத்தில் பேச அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை அனுமதிக்காததை கண்டித்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (19-ந் தேதி) ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு போலீசார் அனுமதி வழங்க மறுத்து விட்டனர்.

இந்த நிலையில் தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்ற எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை போலீசார் கைது செய்தனர்.

இதனை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமையில் ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதில் மாவட்ட அ.தி.மு.க. இணை செயலாளர் கவிதா சசிகுமார், நகர செயலாளர் பால்பாண்டியன், மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன், எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் ரத்தினம், ஒன்றிய செயலாளர்கள் மருது பாண்டியன், ஜானகிராமன், பல்வேறு அணி மாவட்ட செயலாளர்கள் சேது பாலசிங்கம், ஸ்டாலின் ஜெயச்சந்திரன், செந்தில்குமார், சரவணகுமார், ராமநாதபுரம் நகர துணைச்செயலாளர் ஆரிப் ராஜா உள்பட ஏராளமானோர் போரா ட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தி.மு.க. அரசின் அடக்கு முறையை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் காவலில் வைத்தனர்.

Tags:    

Similar News