உள்ளூர் செய்திகள்

மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்

Published On 2022-08-02 10:13 GMT   |   Update On 2022-08-02 10:13 GMT
  • தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
  • தேங்கிய மழை நீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

சேலம்:

சேலத்தில் நேற்று இரவு கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

50 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

சேலம் சன்னியாசி குண்டு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும்மேற்பட் வீடுகளில் மழை நீர் புகுந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளானர்கள்.வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை மக்களே வெளியேற்றினார்கள். எனினும் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கி நின்றதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

சாலை மறியல்

பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டனர். பொதுமக்கள் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.இன்று காலை அங்குள்ள பொதுமக்கள் திரண்டு மழை நீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

நடவடிக்கை

தேங்கிய மழை நீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இந்த மறியல் காரணமாக அந்த வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

Similar News