உள்ளூர் செய்திகள்

மீட்பு பணிகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார்.

ஆற்றில் மூழ்கி பலியானோர் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல்

Published On 2022-07-22 10:20 GMT   |   Update On 2022-07-22 10:20 GMT
  • இரண்டு பேரின் உடலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
  • மதகு சாலையில் உள்ள மூன்று பேரின் வீடுகளுக்கு சென்று அவரது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.

கும்பகோணம்:

பந்தநல்லூர் அருகே மதகு சாலையில் கொள்ளிடம் ஆற்றில் கடந்த 18-ம் தேதி இரவு மீன் பிடிக்க சென்ற மூன்று இளைஞர்கள் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் மனோஜ் (24), ஆகாஷ் (24) ஆகிய இரண்டு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள அவர்களது உடல் திருப்பனந்தாள் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு பேரின் உடலுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மதகு சாலையில் உள்ள மூன்று பேரின் வீடுகளுக்கு சென்று அவரது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். அதனைத்தொட ர்ந்து கொள்ளிடம் ஆற்று பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அரசு தலைமை கொறடா கோவி செழியன், திருப்பனந்தாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் அண்ணாதுரை, ஆர்.டி.ஓ லதா, தாசில்தார் சந்தனவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிவேந்தன் மற்றும் வருவாய்த்துறை, போலீ சார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News