உள்ளூர் செய்திகள்

கணவர் கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை

Published On 2022-07-07 09:49 GMT   |   Update On 2022-07-07 09:49 GMT
  • கணவர் கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.
  • காயத்ரிதேவிக்கு தொடர்பு ஏற்பட்டது.

கரூர்:

கணவர் கொலையில் மனைவி மற்றும் அவரது ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த திருகோரணத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது26). இவர் மனைவி காயத்ரிதேவி என்கிற காயத்ரி (25). இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டம் மண்மங்கலம் கிழக்கூரை சேர்ந்த கமலக்கண்ணன் (25) என்ற உறவினருடன் காயத்ரிதேவிக்கு தொடர்பு ஏற்பட்டது.இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி காயத்ரிதேவியின் தூண்டுதலின்பேரில் மணிகண்டனை கமலக்கண்ணன் மணல்மேடு டாஸ்மாக் மதுகடைக்கு அழைத்த வந்து மது வாங்கிக் கொடுத்து, அவரது நண்பரான மேலஒரத்தையைச் சேர்ந்த ரூபன்குமாருடன் (24) சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளார்.இந்த வழக்கில் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் வழங்கிய தீர்ப்பில் காயத்ரிதேவி, கமலக்கண்ணன் ஆகிய இருவருக்கும் தலா ஒரு ஆயுள் சிறைத்தண்டனையும், தலா ரூ.10 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர். அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஒராண்டு சிறைத்தண்டனையும், போதிய சாட்சியம் இல்லாததால் ரூபன்குமாரை இவ்வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தார்.

Tags:    

Similar News