உள்ளூர் செய்திகள்

கரூர் அரசு கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு

Published On 2022-08-04 08:47 GMT   |   Update On 2022-08-04 08:47 GMT
  • கரூர் அரசு கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது
  • நாளை முதல் நடைபெறுகிறது

கரூர்:

கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி அரசு கலைக்கல்லூரிகளில் நாளை முதல் (4-ந் தேதி) மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கிறது.

கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரி, தரகம்பட்டி, அரவக்குறிச்சி ஆகிய 4 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. தரகம்பட்டி அரசு கலைக்கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை ( 5-ந் தேதி) சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடைபெறுகிறது. தொடர்ந்து 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 8 மற்றும் 11-ந் தேதிகளில் நடைபெறுவதாக கல்லூரி முதல்வர் ம.ஹேமாநளினி தெரிவித்துள்ளார்.

கரூர் அரசு கலைக்கல்லூரியில் 8-ந் தேதி சிறப்பு ஒதுக்கீடு, 10-ந் தேதி தமிழ் ஆங்கிலம். 11-ந் தேதி வணிகவியல், வணிக கணினி பயன்பாட்டியல், வணிக நிர்வாகவியல். 13-ந் தேதி வரலாறு, பொரு ளியல். 16-ந் தேதி விலங்கியல், தாவரவியல், இயற்பியல், வேதியியல், புவியியல், புவிஅமைப்பியல், கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல், ஊட்டச்சத்து, உணவு முறைகள் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரி முதல்வர் எஸ்.கவுசல்யாதேவி தெரிவித்துள்ளார்.

குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரியில் ஆக. 8-ந் தேதி சிறப்பு ஒதுக்கீட்டில் அனைத்து பிரிவுக்கும், 10-ந் தேதி அறிவியல் பாடப்பிரிவுக்கும், 12-ந் தேதி வணிகவியல், 16 -ந் தேதி இளங்கலை தமிழ், ஆங்கில பாடப்பிரிவுக்கு கலந்தாய்வு நடைபெறுவதாக கல்லூரி முதல்வர் அர.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதே போல் அரவக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறும் என கல்லூரி முதல்வர் சுதா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News