உள்ளூர் செய்திகள்

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அரசு தலைமை கொறடா கோவி. செழியன் காலை உணவு வழங்கினார்.

பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா

Published On 2022-09-16 10:23 GMT   |   Update On 2022-09-16 10:23 GMT
  • காலை 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அரசு தலைமை கொறடா கோவி செழியன் காலை சிற்றுண்டி உணவு வழங்கினார்.

தஞ்சாவூர்:

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து இன்று முதல் தமிழகத்தின் அனை த்து மாவட்டங்களிலும் முதலமை ச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை மற்றும் கும்பகோணம் மாநகராட்சிகளில் உள்ள 21 மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் இன்று முதலமைச்சரின் காலை உணவு திட்டம் முதல் கட்டமாக செயல்படுத்தப்பட்டது.

தஞ்சை கூட்டுறவு காலனியில் உள்ள தொடக்கப் பள்ளியில் இன்று காலை 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோர் வரவேற்று பேசினர். அரசு தலைமை கொறடா கோவி செழியன், எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதையடுத்து மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அரசு தலைமை கொறடா கோவி செழியன் காலை சிற்றுண்டி உணவு வழங்கினார். தொடர்ந்து மாணவர்கள் சிற்றுண்டி சாப்பிட்டனர்.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் தஞ்சை மாநகராட்சியில் 8 தொடக்கப் பள்ளிகளில் 375 மாணவ- மாணவிகளும், கும்பகோணம் மாநகராட்சியில் 13 தொடக்கப் பள்ளிகளில் 1067 மாணவ -மாணவிகள் என மொத்தம் 21 மாநகராட்சி தொடக்க பள்ளிகளில் 1442 மாணவ- மாணவிகள் பயனடைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார் மணிகண்டன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, கவுன்சிலர்கள் மேத்தா, நீலகண்டன், மாணவ- மாணவிகளின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News