உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டம் நடந்தது.

மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டம்

Published On 2022-07-11 10:16 GMT   |   Update On 2022-07-11 10:16 GMT
  • ஊனமுற்றோருக்கு ரூ. 3 ஆயிரமும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ. 5 ஆயிரமும் மாதாந்திர உதவித்தொகையாக வழங்கப்பட வேண்டும்.
  • 100 நாள் வேலைத்திட்டத்தில் அரசு உத்தரவாக 4 மணி நேர வேலையும் முழுச்சம்பளமும் வழங்க வேண்டும்.

பட்டுக்கோட்டை:

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க த்தின் பட்டுக்கோட்டை ஒன்றிய முதல் மாநாடு, பட்டுக்கோட்டை நாடி யம்மன் கோயில்ரோட்டில் உள்ள குட்டாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்குபட்டு க்கோ ட்டை ஒன்றிய பொறு ப்பாளர் ஜெயபாலமுருகன் தலைமை தாங்கினார்.

துவரங்குறிச்சி மணிகண்டன் கொடியேற்றினார், பொரு ளாளர் கோட்டைத்துரை வரவேற்புரையாற்றினார், பழஞ்சூர் பாலசுப்ரமணியன், நடுவிக்கோட்டை சின்ன மணி, லெட்சத்தோப்பு சபீர்கான், துவரங்குறிச்சி வினோத்குமார், தம்பிக்கோ ட்டை சிதம்பரம் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் இளங்கோவன் துவக்க உரையாற்றினார். மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி மாநில துணை தலைவர்கணேசன் நிறைவுரை வாங்கினார், கூட்டத்தில் முன்வை க்கப்பட்ட கோரிக்கைகள் பற்றிய விபரம் வருமாறு: ஊனமுற்றோருக்கு 3 ஆயிரம் ரூபாயும், கடும் ஊனமுற்றோருக்கு 5 ஆயிரம் ரூபாயும், மாதாந்திர உதவித்தொகையாக வழங்கப்படவேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தில் அரசு உத்தரவாக 4 மணி நேர வேலையும் முழுச்சம்பளமும் வழங்க வேண்டும். வருவாய் கோட்டா ட்சியரின் மாதாந்திர குறை தீர்ப்பு கூட்டத்தில் பெறப்படும் கோரிக்கைகள் மீது குறிப்பிட்ட கால க்கெடுவில் தீர்வு காணப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானம் நிறைவே ற்றப்பட்டது. செயலாளர்

கோபிச்செ ல்வம் முடிவில் நன்றி கூறினார்.

Tags:    

Similar News