உள்ளூர் செய்திகள்
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்தது
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு 160-ம் குறைந்துள்ளது.
- வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
சென்னை:
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று ஒரு கிராம் ரூ. 4,865-க்கு விற்பனை ஆனது. இன்று இது ரூ.4,845 ஆக குறைந்துள்ளது. பவுன் நேற்று ரூ.38,920 ஆக இருந்தது. இன்று ரூ.38,760-க்கு விற்கப்படுகிறது. தங்கம் இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு 160-ம் குறைந்துள்ளது.
இதேபோல் வெள்ளி விலையும் குறைந்து உள்ளது. கிராம் ரூ. 63.60-ல் இருந்து ரூ. 63 ஆகவும் கிலோ ரூ. 63,600-ல் இருந்து ரூ.63 ஆயிரமாகவும் குறைந்து உள்ளது.