உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் ஆடித்தபசையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க பா.ஜனதாவினர் கோரிக்கை

Published On 2022-08-08 10:00 GMT   |   Update On 2022-08-08 10:00 GMT
  • பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோவில் ஆடித்தபசு திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது.
  • ஆடித்தபசு திருவிழாவையொட்டி நெல்லை மாவட்டத்துக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்.

நெல்லை:

பாரதீய ஜனதா கட்சியின் ஆன்மீக மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் சங்கர சுப்பிரமணியன், துணைத் தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் விஜயா, நந்தினி குமார் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோவில் ஆடித்தபசு திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது.

வழக்கமாக இந்த திருவிழாவில் நெல்லை மாவட்டத்தில் இருந்து திரளான மக்கள் கலந்து கொள்வார்கள். இதையொட்டி சிறப்பு பஸ்களும் இயக்கப்படும்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இல்லாமல் திருவிழா நடைபெற்றது.

இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பொது மக்கள் செல்வார்கள். எனவே ஆடித்தபசு திருவிழாவையொட்டி நெல்லை மாவட்டத்துக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்து அன்னையர் முன்னணி மாவட்ட தலைவி குருவம்மாள் தலைமையிலும் மனு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News