உள்ளூர் செய்திகள்

நேற்று இரவு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய காட்சி.

குலசேகரன்பட்டினத்தில் இன்று இரவு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் பவனி

Published On 2022-10-02 09:21 GMT   |   Update On 2022-10-02 09:21 GMT
  • குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் பவனி வந்துபக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
  • அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிசேகங்களும் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

உடன்குடி:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் 7-ம் திருநாளான இன்று இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் பவனி வந்துபக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். நேற்றும் இன்றும் தசரா குழுவினர் நையாண்டி மேளம் மற்றும் பல்வேறு மேலத்துடன் வந்து காப்பு கட்டி செல்கின்றனர்.

இதனால் கோவில் வளாகம் மற்றும் கடற்கரை வளாகம் கூட்டமாக நிரம்பி வழிகிறது. முன்னதாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிசேகங்களும் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விரதம் இருந்து வந்த பக்தர்கள் தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர் ஊராகச் சென்று அம்மன் பெயரில் காணிக்கைவசூல் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News