உள்ளூர் செய்திகள்

கோவையில் இன்று 1,530 இடங்களில் 33-வது மெகா தடுப்பூசி முகாம்

Published On 2022-08-07 10:22 GMT   |   Update On 2022-08-07 10:22 GMT
  • தமிழகத்திலும் குறைந்த தொற்று தற்போது ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
  • 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மட்டுமே இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டு வந்தது.

கோவை 

இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் குறைந்த தொற்று தற்போது ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

இதையடுத்து ெகாரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக அரசு சாா்பில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இரண்டாம் தவணை பெற்று 9 மாதங்கள் நிறைவடைந்த முன்களப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மட்டுமே இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டு வந்தது.இந்த நிலையில், 75-வது சுதந்திர தின விழாவையொட்டி ஜூலை 15 முதல் 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தவணை தடுப்பூசியை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் 33 -வது மெகா ெகாரோனா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் இன்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 1,081 மையங்கள், மாநகராட்சியில் 340 மையங்கள், நகராட்சிகளில் 109 மையங்கள் என மொத்தம் 1,530 இடங்களில் ெகாரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவா்கள் சிறப்பு முகாமில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திகொண்டு நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.அதன்படி இந்த முகாம்களை பயன்படுத்திக் கொண்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். முகாமிற்கு வந்த மக்கள் வரிசையில் காத்திருந்து ஆர்வமாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.

Tags:    

Similar News