உள்ளூர் செய்திகள்
முக ஸ்டாலின்

பிரதமர் மோடியிடம் ‘நீட்’ விலக்கு மசோதா மனுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளிக்கிறார்

Published On 2022-05-26 10:29 GMT   |   Update On 2022-05-26 13:08 GMT
பிரதமர் மோடி இன்று மாலை சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார்.
சென்னை:

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதன்படி தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றிருந்தபோது இதுதொடர்பாக பிரதமர் மோடியிடம் மனு அளித்திருந்தார். இருப்பினும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்காமலேயே உள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார். இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் விலக்கு தொடர்பான மனுவை அளிக்க உள்ளார்.


Tags:    

Similar News