தமிழ்நாடு செய்திகள்

மெட்ரோ ரெயில் பணிக்காக பெரம்பூர் பேரக்ஸ் ரோடு மூடப்பட்டது

Published On 2024-05-18 14:19 IST   |   Update On 2024-05-18 14:19:00 IST
  • பட்டாளம் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் அஷ்டபுஜம் ரோடு, ரங்கையா தெரு, ஏ.பி. ரோடு வழியாக டவுட்டன் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • ஒரு வழிப்பாதையில் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், பேருந்துகள், செல்ல அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை:

சென்னை வேப்பேரி பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் மெட்ரோ ரெயில் பணிக்காக வாகனங்கள் செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

வடமலை தெரு முதல் அஷ்டபுஜம் ரோடு சந்திப்பு வரை இருவழிப்பாதையும் மூடப்பட்டுள்ளதால், டவுட்டனில் இருந்து செல்லும் வாகனங்கள் ஒரு வழிபாதையாக வடமலைத் தெரு, அருணாச்சலம் தெரு, வெங்கடேச பக்தன் தெரு வழியாக பெரம்பூர் நோக்கி செல்லலாம். பட்டாளம் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் அஷ்டபுஜம் ரோடு, ரங்கையா தெரு, ஏ.பி. ரோடு வழியாக டவுட்டன் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒரு வழிப்பாதையில் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், பேருந்துகள், செல்ல அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போக்குவரத்து மாற்றம் இன்று அமலுக்கு வந்ததை தொடர்ந்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு மற்றும் போலீசார் வாகனங்களை ஒழுங்குப்படுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News