தமிழ்நாடு செய்திகள்
Karur Stampede | கரூர் விவகாரத்தில் செந்தில் பாலாஜி தான் முதல் குற்றவாளி - ஆதவ் அர்ஜுனா
- கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தின்போது மட்டும் செருப்பு வீசப்பட்டது ஏன்?
- 6 மாவட்டங்களில் நடந்த த.வெ.க. பிரசாரத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை.
தி.மு.க. அரசை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற த.வெ.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:
* கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தின்போது மட்டும் செருப்பு வீசப்பட்டது ஏன்?
* 6 மாவட்டங்களில் நடந்த த.வெ.க. பிரசாரத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை. கரூரில் மட்டும் பிரச்சனையானது ஏன்?
* கரூர் பெருந்துயர வழக்கில் எனக்கு மட்டும் சம்மன் அனுப்பியது ஏன் என கேட்கும் செந்தில் பாலாஜி தான் முதல் குற்றவாளி.
இவ்வாறு அவர் கூறினார்.