PM Modi | திருச்சியில் விவசாயிகளின் நண்பன் போல் பிரதமர் கபட நாடகம் போட்டுள்ளார் - அமைச்சர் ரகுபதி
- தேர்தல் வந்துவிட்டால் பிரதமருக்கு உடனடியாக பாசம் வந்துவிடும்.
- மதுரை டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்தது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* விவசாயிகள் குறித்து பேசுவதற்கு பிரதமருக்கு தார்மீக உரிமை இருக்கிறதா?
* தேர்தல் வந்துவிட்டால் பிரதமருக்கு உடனடியாக பாசம் வந்துவிடும்.
* விவசாயிகளுக்காக பிரதமர் மோடி செய்தது என்ன?
* இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு பா.ஜ.க. ஆட்சியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி உள்ளனர்.
* போராட்டம் நடத்திய விவசாயிகளின் மீது வாகனத்தை விட்டு ஏற்றி 4 பேரை கொன்றதை யாரும் மறந்துவிடவில்லை.
* திருச்சி கூட்டத்தில் விவசாயிகளின் நண்பன் போல் பிரதமர் கபட நாடகம் போட்டுள்ளார்.
* மதுரை டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்தது.
* 11 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் சுமார் 1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
* விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதி என்னவானது?
இவ்வாறு அவர் கூறினார்.