உள்ளூர் செய்திகள்
கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசிய காட்சி.

100 ஆண்டுகள் ஆனாலும் பா.ஜனதாவால் எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாது- அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு

Published On 2022-05-17 09:24 GMT   |   Update On 2022-05-17 09:24 GMT
100 ஆண்டுகள் ஆனாலும் பா.ஜனதாவால் எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாது என ஆலங்குளத்தில் நடைபெற்ற சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.
ஆலங்குளம்:

தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார்.

தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன், ஆலங்குளம் பேரூராட்சித் தலைவர் சுதா, அரசு ஒப்பந்ததாரர் சன்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆலங்குளம் நகர தி.மு.க. செயலாளர் நெல்சன் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

 60 ரூபாய்க்கு டீசல் விற்கும்போது இருந்த பஸ் கட்டணமே 110 ரூபாய்க்கு டீசல் விலை இருக்கும் போதும் உள்ளது. அதனால் பஸ் கட்டண உயர்வு இப்போது இருக்கும் என்று யாரும் எண்ண வேண்டாம். போக்குவரத்து துறை கிட்டத்தட்ட 48 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
அ.தி.மு.க.வில் இருந்த வர்கள் பெரும்பாலும் தி.மு.க.வில் இணைந்து விட்ட நிலையில் தற்போது நமக்கு ஒரே எதிரி பா.ஜ.க.தான்.  எனினும் 100 ஆண்டுகள் ஆனாலும் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட அவர்கள் பெற இயலாது. இவ்வாறு அவர் பேசி னார்.

தொடர்ந்து 1000 பெண்களுக்கு அரிசி மற்றும் இலவச சேலை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஓன்றிய செயலாளர்கள் செல்லத்துரை, சீனித்துரை, சிவன்பாண்டியன், மாரிவண்ணமுத்து, மகேஸ் மாயவன், சிவலார்குளம் பஞ்சாயத்து தலைவர் வள்ளியம்மாள் கதிர்வேல், பேரூராட்சி கவுன்சிலர் சுந்தரம், முன்னாள் கவுன்சிலர் மோகன்லால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News