search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alangulam"

    • ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் சிறு, குறு விவசாயிகளுக்கு சுழற்கலப்பையை வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் ஆலங்குளம்,ஊத்துமலை பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேளாண்மை எந்திர மயமாக்கும் துணை இயக்க திட்டத்தின் கீழ் ஆலங்குளம் மற்றும் ஊத்துமலை பகுதியில் உள்ள 13 விவசாயிகளுக்கு சுழற்கலப்பை வழங்கும் விழா நடந்தது.

    வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ஊமைத்துரை தலைமை தாங்கினார். தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்ட ஆலோசகர் வெங்கட சுப்பிரமணியன், வேளாண்மை அலுவலர் சண்முகப்பிரியா, வேளாண்மை விரிவாக்க அலுவலர்கள் கணேசன், செந்தில்குமார், புஷ்பமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவி இயக்குநர் அறிவழகன் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் கலந்து கொண்டு ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 507 மதிப்புள்ள 13 சுழற்கலப்பையை 9 சிறு, குறு விவசாயிகளுக்கு 42 ஆயிரம் மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 4 சுழற்கலப்பை 34 ஆயிரம் மானியத்திலும் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் ஆலங்குளம் மற்றும் ஊத்துமலை பகுதியில் இருந்து விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அச்சங்குட்டம் கிராமத்தில் அரசு பள்ளி வேண்டுமென அங்குள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    • ஆலங்குளம் போலீஸ் நிலையம் அருகில் சுமார் 300 பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் அச்சங்குட்டம் கிராமத்தில் அரசு பள்ளி வேண்டுமென அங்குள்ள பொதுமக்கள் அரசுக்கு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை திடீரென ஆலங்குளம் போலீஸ் நிலையம் அருகில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமையில் ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் என சுமார் 300 பேர் திரண்டு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக கூறி போலீசார் பொதுமக்களையும், இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சாக்ரடீஸ், விசுவஹிந்து பரிசத் மாவட்ட இணைச்செயலாளர் தங்கராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட 174 பேரை கைது செய்தனர்.

    இதனையொட்டி அங்கு ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பர்னபாஸ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • கிடேரி கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் தாது உப்புக் கலவைகள் வழங்கப்பட்டது.
    • கன்று பேரணி நடத்தி சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஒன்றியத்தில் உள்ள அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமமான நெட்டூர் கிராமத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் நெட்டூர் கால்நடை மருத்துவர் ராமசெல்வம் மற்றும் வீராணம் கால்நடை மருத்துவர் சந்திரன் ஆகியோர் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, சினை பரிசோதனை, செயற்கைமுறை கருவூட்டல், மடிவீக்க நோய் சிகிச்சை போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

    மேலும் கிடேரி கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் தாது உப்புக் கலவைகள் வழங்கப்பட்டது. சிறந்த கால்நடை பராமரிப்பு மேலாண்மை விருது மற்றும் கன்று பேரணி நடத்தி சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் நெட்டூர் கால்நடை மருத்துவர் ராமசெல்வம் நன்றி கூறினார்.

    முகாமில் கால்நடை ஆய்வாளர் மகேஷ் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் கீதா பிச்சையா மற்றும் கால்நடை வளர்க்கும் ஏராளமான விவசாயிகள் தங்கள் கால்நடைகளுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    • பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுற்றுச் சுவரை அகற்றக் வேண்டும்.
    • பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், கவுன்சிலர்களுடன் சேர்ந்து கோரிக்கை மனு வழங்கினார்.

    தென்காசி:

    ஆலங்குளம் பேரூராட்சி 10-வது வார்டு பகுதியில் பொதுமக்கள் செல்லும் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுற்றுச் சுவரை அகற்றக் வேண்டும். பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த உயர் கோபுர மின் விளக்கை மீண்டும் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி தென்காசி மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், தெற்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் கவுன்சிலர்கள் சுந்தர், ராஜதுரை ஆகியோருடன் சேர்ந்து கோரிக்கை மனு வழங்கினார்.

    அப்போது தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, சேர்வைக்காரன்பட்டி ஊராட்சிமன்ற தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சங்கர், ஊராட்சி தலைவர் ராம்குமார், முகமது யாகூப் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அஜய், இளைஞர் அணி அரவிந்த், பூதத்தான் அருணா பாண்டியன், குணா, ராஜபாண்டியன், நவீன் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் மேசியா ஜெய் சிங் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • விழாவிற்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் செயலாளர் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார்.
    • முன்னாள் எம்.பி. ராமசுப்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டியில் காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் ராஜீவ் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    காங்கிரஸ் தென்காசி மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். வடக்கு வட்டார செயலாளர் நெட்டூர் இசக்கிமுத்து முன்னிலை வகித்தார்.

    விழாவில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வந்த கல்வி கடன் திட்டம் மற்றும் உணவுப்பொருள் பாதுகாப்பு திட்டத்தின் அவசியத்தையும், அதன் பயனையும் எடுத்துக்கூறி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    விழாவில் ஆலங்குளம் நகர துணை தலைவர் லெனின், ஜெயம், ஜவுளிக்கடை செல்வராஜ், மகாராஜா சிங் , கடங்கநேரி ஆராய்ச்சி மணி, இனிகோ, வெள்ளத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல் வரிசை நடவு வயல்களில் களை எடுக்கும் எந்திரங்கள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டது.
    • வயல்களில் எந்திரம் மூலம் களை எடுப்பதால் வேலை ஆட்களின் தேவை குறையும்.

    ஆலங்குளம்:

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உலக வங்கியின் நிதி உதவியுடன் இயங்கும் நீர்வள நிலவள திட்டத்தின் சிற்றாறு பாசனப் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 விவசாயிகளுக்கு நெல் வரிசை நடவு வயல்களில் களை எடுக்கும் எந்திரங்கள் மானியத்தில் வழங்கப்பட்டது.

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அம்பை நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இணை பேராசிரியர் மற்றும் தலைவர் சரவணன் நெல் வரிசை நடவு வயல்களில் எந்திரம் மூலம் களை எடுப்பதால் வேலை ஆட்களின் தேவை குறையும்.

    மேலும் பயிர்களுக்கு காற்றோட்டம் சீராகும் போன்ற சில பயன்களை கூறி விவசாயிகளுக்கு எந்திரங்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் இணை பேராசிரியர் ரஜினிமாலா உடனிருந்தனர்.

    • விருது பெரும் போட்டியில் வாடியூர், மாயமான்குறிச்சி, மேலவீராணம் ஆகிய ஊராட்சிகள் மாநில அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளனர்.
    • தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், மாயமான்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் பால்தாய் ஆகியோரிடம் சான்றிதழை வழங்கினார்.

    ஆலங்குளம்:

    மத்திய அரசின் 2023-ம் ஆண்டிற்கான தேசிய ஊராட்சிகள் விருது பெரும் போட்டியில் பங்கு கொண்டு தமிழ்நாடு மாநில அளவில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த வாடியூர், மாயமான்குறிச்சி, மேலவீராணம் ஆகிய ஊராட்சிகள் மாநில அளவில் முதல் இடத்தையும், மாறாந்தை ஊராட்சி மாநில அளவில் 2-ம் இடத்தையும் பெற்றுள்ளனர். அதன் அடிப்படையில் மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் துறையின் சார்பாக வழங்கப்பட்ட சான்றிதழை தென்காசியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், மாயமான்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் பால்தாய் ஆகியோரிடம் வழங்கினார்.

    • கிராமசபை கூட்டத்தில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி ஊராட்சி தலைவர் வள்ளியம்மாள் கதிர்வேல் அதனை புறக்கணித்தார்.
    • ஏரி, குளங்களில் மரம் நட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவலார்குளம் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி தலைவர் வள்ளியம்மாள் கதிர்வேல், கிராமசபை கூட்டத்தில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இதனால் கிராமசபை கூட்டத்திற்கு துணை தலைவர் கோவில்பாண்டி தலைமை தாங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசாரதி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் பழனி தீர்மானங்களை வாசித்தார்.

    கிராமத்தில் பசுமை வளங்களை அதிகரிக்க ஏரி, குளங்களில் மரம் நட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராமசபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் குமுதா, முருகேஷ்வரி, வேலம்மாள், மேகனா செல்வி மற்றும் கிராமமக்கள் பங்கேற்றனர்.

    • ஆதார்கார்டு திருத்தம் உள்ளிட்ட பணிகளை அருகில் உள்ள தபால் நிலையம் சென்று மேற்கொள்ள அறிவுறுத்துகின்றனர்.
    • தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பொதுமக்களை மிகவும் அலட்சியமாக பேசுவதாக அவர்கள் புகார் கூறுகின்றனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக ஆலங்குளம் விளங்கி வருகிறது. இங்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை அள்ளித் தரும் காய்கனி சந்தை, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், அரிசி ஆலைகள் உள்ளன.

    மேலும் இங்கு சார்பதிவாளர் அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி, தாலுகா அலுவலகம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட வகை ளும் உள்ளன. விரைவில் வட்டார போக்கு வரத்து கிளை அலுவலகம் அமை க்கப்பட உள்ளது. ஆலங்கு ளத்தை சுற்றிலும் அமைந்து ள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் தேவைகளுக்கு இங்கு தான் வந்து செல்கின்றனர்.

    குறிப்பாக ஆதார் கார்டு திருத்தம், வருமானச்சான்று, சாதிச்சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள், ரேசன் கார்டு, பட்டா விண்ணப்பித்தல் உள்ளிட்ட வற்றுக்கும் ஆலங்கும்-தென்காசி சாலையில் அமைந்துள்ள தாலுகா அலுவலகத்திற்கு தான் மக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

    இந்த அலுவலகத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து விதமான சான்றி தழ்கள் விண்ணப்பித்தல் உள்ளிட்டவற்றுக்கு ஆதார் மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றிய ஊழியர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் ஒரு மாதமாக அந்த மையம் பூட்டியே கிடக்கிறது. பொதுமக்கள் அங்கு வந்து ஏமாந்து திரும்பி செல்கின்றனர். இதுதொடர்பாக அங்கு பணியாற்றும் ஊழியர்க ளிடம் கேட்டால், அருகில் உள்ள தபால் நிலையம், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஆகியவற்றில் சென்று ஆதார்கார்டு திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்து கின்றனர்.

    ஆனால் அங்கோ நாளொன்றுக்கு 5 பேரின் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்பட்டு ஆன்லைன் மூலமாக திருத்தம் மேற்கொ ள்ளப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதில் குறிப்பாக தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பொதுமக்களை மிகவும் அலட்சியமாக பேசுவதாக அவர்கள் புகார் கூறுகின்றனர்.

    எனவே தாலுகா அலுவலகத்தில் முடங்கி கிடக்கும் மையம் செயல்பட ஏதுவாக உடனடியாக அங்கு ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆலங்குளம் கருவந்தா கோவில் கொடை விழாவில் வாலிபர் கொலை
    • ஊர்க்காவல்படை வீரர் உள்பட 3 பேர் கைது.

    நெல்லை:

    நெல்லை பேட்டை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் அண்ணாத்துரை. இவரது மகன் சேதுபதி( வயது 20) இவரது உறவினர் வீடு ஆலங்குளம் அருகே உள்ள கருவந்தாவில் உள்ளது.

    கடந்த 3-ந்தேதி கருவந்தாவில் நடந்த கோவில் கொடை விழாவிற்கு சேதுபதி சென்றிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் சேதுபதியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதுதொடர்பாக ஊத்துமலை இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், சந்திரசேகர், ஷியாம் சுந்தர் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த கொலை வழக்கில் கருவந்தாவை சேர்ந்த ஊர்க்காவல்படை வீரர் உள்பட 3 பேர் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    கருவந்தா கோட்டை தெருவை சேர்ந்தவர்கள் சேர்மராஜா(வயது 27), மணிகண்டன்(25), சாமுவேல் சுகுமார்(26). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். இவர்களில் சேர்மராஜா ஊர்க்காவல் படை வீரராக உள்ளார். மற்ற 2 பேரும் விவசாயம் செய்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று கோவில் கொடை விழாவின்போது சேதுபதி அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 3 பேரும் சேர்ந்து சேதுபதியை சத்தம் போட்டுள்ளனர்.இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் 3 பேரும் சேர்ந்து சேதுபதியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டியில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    ஆலங்குளம்:
     
    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். ஆட்டோ டிரைவர். இவரது மகள் இந்து (வயது 18).

    இவர் ஆலங்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று கல்லூரிக்கு வந்த மாணவி இந்து திடீரென விஷத்தை குடித்து மயங்கி விட்டார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை மாணவி இந்து பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிந்து, எதற்காக மாணவி தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆலங்குளம் பகுதியில் அணுகு சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஆலங்குளம்:

    நெல்லை-தென்காசி இடையே நான்கு வழிச்சாலை பணிகள் தொடங்கி கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வருகிறது.சுமார் 100-க்கும் மேற்பட்ட சிறு பாலங்கள், பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் அருகே மேம்பாலம் உள்ளிட்டவை இந்த பகுதியில் அமைக்கப்படுகிறது. இதில் சில பாலங்கள் கான்கிரீட் கொண்டு அமைக்கப்படாமல் ராட்சத குழாய்களை கொண்டு அமைக்கப்படுகிறது.

    சாலையின் ஒரு பகுதியில் இருந்து மறுபகுதிக்கு மழைநீர் செல்ல குழாய் அமைக்கப்பட்டு உள்ளது.  ஆனால் ஆலங்குளம் மலைக்கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள குழாய்களின் இருபுறமும் பாதி அளவு மண் நிரம்பி உள்ளது.

     மேலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் மறு நடவு செய்யப்பட்ட நிலையில் அவைகளில் பெரும்பாலானவை பராமரிப்பின்றி பட்டு போகும் நிலையில் உள்ளது. இந்த திட்டத்திற்கு சுமார் ரூ. 1.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும்  அவை முறையாக பராமரிக்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

    தற்போது அமைக்கப்பட்டு வரும் சாலையில் இருபுறமும் அணுகுசாலை இல்லாமல் இருப்பதால் கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறினால் நேரடியாக சாலையிலேயே கால் வைக்கும் நிலை உள்ளது. எனவே பெரிய அளவில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    ஏனெனில் இந்த சாலை வழியே பயணிக்கும் வாகனங்கள் அதிவேகமாக செல்லக்கூடும். நகர் மற்றும் ஊர் பகுதிகளில் இருந்து வெளியேறும் மக்கள் இதை கவனிக்காமல் சாலையின் குறுக்காக சென்றால் அசம்பாவிதங்கள் நடைபெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    இதேபோல் குழாய் பதிக்கும் இடத்திற்கு சற்று தொலைவில் பேரிகார்டுகள் உள்ளிட்ட எச்சரிக்கை பலகைகள் வைக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     தற்போதைய திட்டப்படி சாலை அமைக்காமல் அணுகு சாலை அமைத்து நான்குவழிச் சாலை பணிகளை தொடரவேண்டும்.  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நான்குவழிச் சாலை பாலம், அணுகுசாலை, மரங்கள் மறு நடவு, பொதுமக்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    ×