உள்ளூர் செய்திகள்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Published On 2022-05-15 10:34 GMT   |   Update On 2022-05-15 10:34 GMT
மீட்புப் பணிகளுக்கு உதவிட தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் அரக்கோணத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நெல்லை பொன்னாக்குடி அருகே கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. இங்கு தொழிலாளர்கள் நேற்று குவாரி பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, நேற்று இரவு கல்குவாரியில் இருந்த பாறை திடீரென சரிந்து விழுந்தது. இதில் 300 அடி ஆழ பள்ளத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து, தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். கல்குவாரி விபத்தில் 3 பேர் பலியாகினர் என மீட்கப்பட்ட தொழிலாளி கூறியதாக தகவல் வெளியானது.

மேலும், கல்குவாரியில் இருந்து 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். கல் குவாரியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. மீட்புப் பணிகளில் ஹெலிகாப்டர், ராட்சத இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், பாறை சரிந்ததில் பள்ளத்தில் சிக்கியுள்ள நபர்களை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் மீட்புப் பணிகளுக்கு உதவிட தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் அரக்கோணத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்.. இலங்கை அதிபர் பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டம்- அந்நாட்டு பிரதமர் விக்ரமசிங்கே ஆதரவு
Tags:    

Similar News