உள்ளூர் செய்திகள்
.

சேலத்தில் தம்பதி மீது தாக்குதல்-போலீசார் விசாரணை

Update: 2022-05-15 10:08 GMT
சேலத்தில் தம்பதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் சந்திரா  நகர் பகுதியை சேர்ந்தவர்  ரா‌ஜூ (வயது 30). பட்டதாரி. இவர் தனது மனைவியுடன் சூரமங்கலம் ஜாகீர்அம்மாபாளையம் பாரதி நகர் பகுதியில் வசித்து வருகிறார்.
 
பட்டதாரியான ரா‌ஜூ, சேலம் வெண்ணங்குடி முனியப்பன் கோவில் அருகே உள்ள பிரபல தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.  நேற்று இரவு 7 மணி அளவில்  ரா‌ஜூ தனது மனைவியுடன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அருகில் வசிக்கும் பிரபாகரன் என்பவரின் மகன், அவர்கள் மீது  மோதி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.  இதனால் பிரபாகரனிடம்  தட்டிகேட்டபோது  ஆத்திரமடைந்த அவரும், அவரது மனைவியும் சேர்ந்து ராஜூ மற்றும் இவருடைய மனைவி யை சரமாரியாக தாக்கினர்.

இதுகுறித்து ராஜூ சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News