உள்ளூர் செய்திகள்
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

Published On 2022-05-11 23:14 GMT   |   Update On 2022-05-11 23:14 GMT
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகிக் கொண்டே போவது மிகுந்த கவலை அளிக்கிறது என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை:

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டாக குற்றங்களே நடைபெறவில்லை என்று சட்டமன்றத்தில் பேசினால் போதுமா? ஒவ்வொரு நாளும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் அரங்கேறுகிறது. கொலை, கொள்ளை என்று தமிழகம் அதகளப்படுகிறது.

தமிழக அரசுக்கு முக்கியமான பல பிரச்சினைகள் இருக்கின்றன. பல கவலைகள் இருப்பதால், சட்டம்-ஒழுங்கை பற்றி கவலைப்பட நேரம் இல்லை.

பெண்களுக்கு தருவதாக சொன்ன உரிமைத் தொகை என்ன ஆச்சு? தங்க நகைக்கடன் தள்ளுபடி வழங்குவது என்ன ஆச்சு? பெட்ரோல் விலை குறைப்பேன் என்ற வாக்குறுதி என்ன ஆச்சு? இது மட்டுமில்லாது மக்களை அச்சுறுத்தி வாயை மூட வைக்க நடத்தப்படும், ‘லாக் அப்’ மரணங்கள்.

மகளிருக்கும், குழந்தைகளுக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் அச்சுறுத்தல் தொடருமானால் பா.ஜ.க. மக்களை ஒன்றுதிரட்டி வீதிக்கு வந்து போராடும் என்பதை தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News