உள்ளூர் செய்திகள்
தமிழக சட்டசபை

சட்டசபை தகவல் களஞ்சியமாக மனம் வீசும் “நூற்றாண்டு மலர்”

Published On 2022-05-10 09:32 GMT   |   Update On 2022-05-10 09:32 GMT
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகிய முதலமைச்சர்களின் சிறப்பு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டசபையில் வெளியிட்ட தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மலர் 360 பக்கங்களை கொண்டு இருக்கிறது. சட்டசபை தகவல்களை முழுமையாக தரும் வரலாற்று களஞ்சியமாக இந்த விழா மலர் உருவாக்கப்பட்டு இருக் கிறது. இந்த மலரில் தமிழக சட்டசபையின் சிறப்புகளை தொகுத்துள்ளனர்.

காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகிய முதல்-அமைச்சர்களின் சிறப்பு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அதோடு தேசிய அளவில் ஜனாதிதி, பிரதமர் பற்றிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. தமிழக கவர்னர்களின் பற்றிய குறிப்புகளும் உள்ளன.

தமிழக சட்டசபை தேர்தல் தகல்கள் முழுமையாக உள்ளன. மேலும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பற்றிய சிறப்பு தகவல்களை அமைச்சர்கள் எழுதி உள்ளனர்.

மேல்சபை பற்றிய அறிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. வரலாற்றை நினைவுப்படுத்தும் வகையில் அரிய புகைப்படங்களும் இந்த நூற்றாண்டு விழா மலரில் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News