உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

பணி நிரந்தரம் செய்ய கோரி செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Update: 2022-05-05 10:04 GMT
பணி நிரந்தரம் செய்ய கோரி செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்:

பணி நிரந்தரம் செய்யக்கோரி கரூரில் எம்.ஆர்.பி.செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எம்ஆர்பி செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும்,

தேர்தல் வாக்குறுதியில் 356வது வாக்குறுதியாக இதனை தெரிவித்த முதல்வர் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறை வேற்றித்தர முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கரூர் மாவட்ட தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கம் சார்பில் மாவட்டத்தலைவர் பி.ஜெயந்தி தலைமையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மாவட்டச்செயலாளர் நித்யா தொடக்க உரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் பி.பிரவீணா மாவட்ட இணைச்செயலாளர் அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் மு.சுப்பிரமணியன்,

மாவட்ட செயலாளர் கெ.சக்திவேல், பொருளாளர் பொன்.ஜெயராம், மாவட்ட இணைச்செயலாளர் எல்.பாலசுப்பிரமணி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜ.ஜெயராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட பொருளாளர் குழந்தை தெரசா நன்றி கூறினார்.
Tags:    

Similar News