உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கோத்தகிரி: டேன் டீ தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் ஊர்வலம்

Published On 2022-05-03 10:18 GMT   |   Update On 2022-05-03 10:18 GMT
தேயிலை தொழிலாளர்கள் படும் கஷ்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அரவேணு, மே.3-
மே தினத்தை முன்னிட்டு கோத்தகிரியில் டேன் டீ தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஊர்வலம் நடத்தினர். 
கோத்தகிரியின்  முக்கிய பிரதான மக்கள் கூடும் இடங்களான ராம்சந்த், காமராஜர் சதுக்கம், பேருந்து நிலையம் வழியாக மார்க்கெட் திடல் வந்தடைந்தனர்.இங்கு அமைக்கப்பட்ட பொதுமேடையில் மே தினத்தின் சிறப்பு நிகழ்ச்சி குறித்தும், அதுமட்டுமன்றி தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு ரூ.425.40 பைசா விடுப்பு சம்பளம், கொரோனா கால விடுப்பு சம்பளம் குறித்தும், தோட்டத் தொழிலாளர்களிடம் தேயிலைத் தோட்டம் சரியான பராமரிப்பு இல்லாமல் நாளொன்றுக்கு தலைக்கு 60 கிலோ தேயிலை கேட்பது குறித்து குறிப்பாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் படும் கஷ்டங்கள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.    பெனடிக்,  தம்பிராஜ், தாயகம் திரும்பியோர் தலைவர் வசந்தகுமாரி, ஆசா பணியாளர் தலைவர்், குன்னூர் சரண்யா கிஷோர் மற்றும் டேன்டீ தோட்டத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.  

Tags:    

Similar News