உள்ளூர் செய்திகள்
எச்சரிக்கை பலகைகள் இல்லாத சாலை வளைவு.

குப்பனூர் மலைச்சாலையில் எச்சரிக்கை பலகைகள் வைக்க கோரிக்கை

Published On 2022-05-03 09:34 GMT   |   Update On 2022-05-03 09:34 GMT
ஏற்காட்டுக்கு செல்லும் குப்பனூர் மலைச்சாலையில் எச்சரிக்கை பலகைகள் வைக்க பொதுமக்கள் கோரிக்கை.
அயோத்தியபட்டணம்:

கோடை மாதத்தில் சுற்றுலா பயணிகளுக்கு இயற்கை எழிலுடன் பொழுது போக்கிற்காக குடும்பத்துடன் செல்லும் சுற்றுலா தலம் என்றால் நினைவிற்கு வருவது  குளிர்ச்சியான ஏற்காடு. 
 சேலம் மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலைத் தொடரில் ஏற்காடு  அமைந்துள்ளது. 

ஏற்காட்டுக்கு அஸ்தம்பட்டி வழியாகவும் மற்றும்  குப்பனூர் வழியாக சுற்றுலாப் பயணி–கள் அதிகமாக சென்று வருகின்றனர்.
 வேலூர் திருப்பத்தூர் , அரூர், ஆத்தூர் , வாழப்பாடி பகுதியில் இருந்து வருபவர்கள் அதிகமாக  குப்பனூர் வழியையே பயன்படுத்துகின்றனர். தற்போது ஏற்காடு கோடை விழா ஏற்பாடுகள் மும்முரமாக பணிகள் நடந்துவரும்  நிலையில்  குப்பனூர்-ஏற்காடு சாலையில் அபாயகரமான வளைவுகளில் பாதுகாப்பு–காக  ஒரு எச்சரிக்கை பலகை கூட இல்லை.

வாகனத்தில் செல்வோ–ரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.  புதிதாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். ஒருவாகனம் வந்தால் அந்த வாகனத்தை ஒரம் எடுப்பதில் மிக சிரமாக உள்ளது. ஏனெனில் இருப்புறங்களிலும் மழை காலங்களில் ஏற்பட்ட மண்சரிவே காரணம். 

அதிகாரிகள்  அபயாக–ரமான பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைத்து தருமாறும் இருபுறங்களிலும் தடுப்பு சுவர் அமைத்து தருமாறு  சுற்றுலா பயணிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News