உள்ளூர் செய்திகள்
.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 51,017 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்க உத்தரவு

Published On 2022-05-03 09:30 GMT   |   Update On 2022-05-03 09:30 GMT
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 51,017 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்க உத்தரவ, விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
சேலம்:

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ந்தேதி வரை  16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் வாங்கிய  12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்தும்,  இந்த கடன் தள்ளுபடி திட்டத்தினை  செயல்படுத்த ஏதுவாக வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியும் அரசு உரிய ஆைணகள் வெளியிட்டது. 

இந்த நிலையில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 51,017 விவசாயிகளுக்கு பல்வேறு காரணங்களால் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படாமல் இருந்தது.  இது முதல்-அமைச்சரின்  கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 51,017 விவசாயிகளுக்கு  ரூ.501.69 கோடி பயிர்க்கடனை  தள்ளுபடி செய்தும்,  மீண்டும் பயிர்க்கடன் வழங்க ஆணை வழங்கியும், முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

இந்த அறிவிப்பு தொடர்பாக சில தெளிவுரை–களை வழங்குமாறு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அரசிடம் கோரிக்கை வைத்தார். பதிவாளரின் கருத்துருவை அரசு பரிசீலனை செய்து, தெளிவுரை வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது.

இதுதொடர்பாக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் முகமது நசீமுதீன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சேலம், நாமக்கல் மாவட்–டங்களில் விதிமீறல்களுக்கு உட்பட்டு கடன் வழங்குதல், இனி நடைபெறாத வண்ணம் நடவடிக்கை  மேற்கொள்ளப்படும். சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 51,017 விவசாயிகளுக்கு ரூ.501.69 கோடி  அளவிற்கு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படும். இதற்கான சான்றிதழை விவசாயிகளுக்கு பதிவாளர் அளவிலேயே வழங்கிட அனுமதி வழங்கப்படுகிறது.  மேலும் நடப்பாண்டில் மீண்டும் பயிர்க்கடன் வழக்கம்போல் தொடர்ந்து வழங்கப்படும். 

பயிர்க்கடன் தள்ளுபடியை செயலாக்குவதில் ஏற்பட்டுள்ள விதிமீறல்களை கண்டறியும் பொருட்டு வெளி மாவட்ட அலுவலர்களை கொண்டு 100 சதவீதம் மறு ஆய்வு மேற்கொள்ளப்–பட்டதற்கான ஆய்வறிக்கை மற்றும் தவறிழைத்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

விவசாயிகளுக்கு விதிமீ–றல்களுக்கு உட்பட்டு கடன்கள் வழங்கிய அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்ட விபரத்தினை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். தற்போது வரை பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து பெறப்பட்ட தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  முறைகேடாக வழங்கப்பட்டுள்ள தள்ளுபடி தொகை குறித்த விபரங்களும் தெரிவிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

பயிர்க்கடன் தள்ளுபடி உத்தரவால் சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த 51,017 விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News