search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிர்க்கடன்"

    • நகை இல்லாமல் பயிர்க்கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
    • கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் எடுத்துக் கூறினார். உழவன் செய லியை பதிவிறக்கம் செய்ய வும், அதன் பயன்பாடு குறித்து எடுத்துரைக்கவும் அனைத்து வேளாண்மை உதவி இயக்குநர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.

    தோட்டக்கலை துறையின் கீழ் இருக்கும் அனைத்து பண்ணைகளிலும் நன்றாக விளைந்த நாற்றாங்கால்கள் உரிய நேரத்தில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மிளகாய் மற்றும் தக்காளி நாற்றுக்கள் பருவ காலத்தில் கிடைக்க வழிவகை செய்யப் பட்டுள்ளதாகவும், வரும் காலங்களில் வருவாய் துறை அலுவலர்களால் வழங்கப் படும் அடங்கலுடன், ஒப்பம் செய்யப்பட்ட நகலும் சேர்த்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் கொப்பரைத் தேங்காய் உலர்த்தும் கருவி, வெட்டும் கருவி, மரம் ஏறும் கருவி ஆகியவற்றை மானி யத்தில் வழங்க வேண்டி அரசுக்கு பரிசீலனை அனுப்பப்பட உள்ளது என்றும் கூட்டுறவுத் துறை மூலம் அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தேவையான அளவில் யூரியா உரம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக் கப் பட்டது.

    கூட்டுறவுத்துறையில் நகை இல்லாமல் பயிர்க் கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதற்கு வழி வகை செய்யப்படும் என்று அவர் பதிலளித்தார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், வேளாண்மை இணை இயக்குநர் கோ.பத்மாவதி, மாவட்ட கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகளுக்கு ரூ.200 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 180 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தமிழக அரசின் வட்டியில்லா பயிர்க்கடன் திட்டம் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் நடப்பாண்டு ரூ.200 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் போதிய உரம் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு தற்போது வரை ரூ.135.30 கோடிக்கு பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

    எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி வட்டியில்லா பயிர்க்கடன் பெற்று பயனடைய அனைத்து விவசாயிகளுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

    மேலும் கடன் தேவை யுள்ள விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர் அடங்கல், 10(1)சிட்டா, குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் 2 புகைப்படம் ஆகிய வற்றுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நேரில் விண்ணப்பித்து பயிர்க்க டன்கள் பெறலாம்.

    கூட்டுறவு சங்கங்களில் இதுவரை பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உரிய பங்குத்தொகை செலுத்தி புதிய உறுப்பினர்களாக சேர்ந்து பயிர்க்கடன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விருதுநகர் மாவட்ட விவசாயிகள் வட்டியில்லா பயிர்க்கடன் பெற ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை கூட்டுறவு இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் தகுதியுள்ள விவசாயிகளுக்கு நடப்பு ஆண்டில் ரூ.200 கோடி வரை பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6 ஆயிரத்து 972 விவசாய உறுப்பினர்கள் ரூ.58.06 கோடி பயிர்க்கடன் பெற்றுள்ளனர்.

    விவசாமிகள் அனைவரும் அருகில்‌ உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க்கடன் கோரி விண்ணப்பிக்கலாம். கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கடந்தாண்டு 20 ஆயிரத்து 353 உறுப்பினர்களுக்கு ரூ.135.51 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

    இவற்றில் 3 ஆயிரத்து 420 புதிய உறுப்பினர்கள் ரூ.23.07 கோடிக்கு பயிர்க்கடன் பெற்றுள்ளனர். நடப்பு ஆண்டில் மாநில தொழில்நுட்ப குழுவினரால் நிர்ணயம் செய்யப்பட்ட 2022-23 ஆண்டு பயிர்க்கடனளவு திட்டத்தின்படி அருகில் உள்ள சங்கங்களில் அனைத்து விவசாயிகளும் கடன் பெறலாம்.

    6 முதல் 15 மாதங்களுக்கு உட்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கே.சி.சி. குறுகிய கால பயிர் கடன்களை உரிய ஆவணங்களுடன் நபர் ஜாமீன் அல்லது தங்க நகை அடமானத்தின் பேரில், அதிகபட்சமாக ரூ.1.60 லட்சம் வரையிலும், தங்க நகை அடமானத்தின் பேரில் அல்லது சாகுபடி நில அடமானத்தின் பேரில் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரையிலும் அனைத்து சங்கங்களிலும் வட்டியில்லா பயிர்க்கடன் பெறலாம். உரிய தவணை தேதிக்குள் கடனை திருப்பி செலுத்தினால் வட்டி செலுத்த தேவையில்லை.

    இதன்படி ஏக்கர் ஒன்றுக்கு பயிர்க்கடன் அளவானது நெல் (பாசனம்/மானாவாரி) ரூ.26100, மக்காச்சோளம் (பாசனம்) ரூ.28750, (மானாவாரி) ரூ.19200, பருத்தி (பாசனம்) ரூ.26350, (மானாவாரி) ரூ.17550, மிளகாய் (பாசனம்) ரூ.26950, (மானாவாரி) -ரூ.20250, தென்னை (பராமரிப்பு) ரூ.25450, நிலக்கடலை (பாசனம்) ரூ.24900, நிலக்கடலை (மானாவாரி) ரூ.20200 ஆகும்.

    விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை கீழ்க்காணும் ஆவணங்களுடன் அணுகி கடன் பெற்று பயன் அடையலாம்.

    கடன் தேவையுள்ள விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர் அடங்கல், 10(1) சிட்டா, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு உள்ள 2 புகைப்படம் ஆகியவற்றுடன் அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நேரில் விண்ணப்பித்து பயிர்க்கடன் பெறலாம்.

    இதுவரை பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உரிய பங்குத் தொகை மற்றும் நுழைவு கட்டணம் செலுத்தி புதிய உறுப்பினர்களாக சேர்ந்து பயிர்க்கடன் பெறலாம். விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் போதிய உரம் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு ரொக்கமாகவும், கடன் அடிப்படையிலும் வழங்கப்பட்டு வருகிறது.கூடுதல் விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர்-94899 27003, பொது மேலாளர்-94899 27001, உதவி பொது மேலாளர்-94899 27006, மேலாளர் (விவசாயம்) 94899 27177, களமேலாளர் (விருதுநகர்)-94899 27044, களமேலாளர் (ஸ்ரீவில்லிபுத்தூர்) 94899 27021, களமேலாளர் (அருப்புக்கோட்டை)-94899 27023 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இதர அரசுத்துறைகளில் அரசு மானிய திட்டங்களில் பயன்பெற முடியவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
    • விதிமுறைகளை பின்பற்றி உரிமைச்சான்று வழங்க கலெக்டர் உத்தரவிட வேண்டும்.

    திருப்பூர்:

    விவசாயிகள், கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெறுவது, விவசாய நகைக்கடன் பெறுவது, மானிய திட்டங்களில் பயன்பெறும் போதும் பல்வேறு வகை நில உடைமை ஆவணங்கள் கேட்கப்படுகின்றன. வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்கியுள்ள நில உடைமை ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்கின்றனர்.

    அனைத்து வகை ஆவணங்கள் இருந்தாலும், வருவாய்த்துறையில் உரிமைச்சான்று பெற்று கொடுக்க வேண்டும் என வங்கிகளும், கூட்டுறவு சங்கங்களும் வற்புறுத்துகின்றன. இதனால் கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் ஆகியோரிடம் நில உரிமைச்சான்று பெற்று வழங்கிவந்தனர்.

    இந்நிலையில் வருவாய்த்துறையை சேர்ந்த யாரும், நில உரிமைச்சான்று வழங்க கூடாது என கலெக்டர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதனால் கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள், இதர அரசுத்துறைகளில் அரசு மானிய திட்டங்களில் பயன்பெற முடியவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் விவசாயிகள் கூறியதாவது:-

    தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் உரிமை சான்று வழங்கப்படுகிறது. ஆனால் யாருக்கும் உரிமைச்சான்று வழங்க கூடாது என கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மின் வாரிய சேவைகளுக்கு உரிமைச்சான்று கட்டாயம்.

    பயிர்க்கடன் பெறுவது, மானிய திட்டங்களில் கடன் பெறுவது என கூட்டுறவு சங்கமும், வங்கிகளும் உரிமைச்சான்று கட்டாயம் வேண்டும் என்கின்றனர். இதனால் நடப்பு ஆண்டு பயிர்க்கடன் பெற முடியாத சூழல் உள்ளது.உரிமைச்சான்று வழங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டால், எந்த அரசுத்துறையும் உரிமைச்சான்று கேட்கவும் கூடாதென அறிவுறுத்த வேண்டும்.

    கூட்டுப்பட்டா, பாகசாசனம் செய்யாத நிலங்களுக்கு, அரசு சேவைகளை பெற, உரிமைச்சான்று கட்டாயம் தேவைப்படும். எனவே, விதிமுறைகளை பின்பற்றி உரிமைச்சான்று வழங்க கலெக்டர் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் கூறுகையில், உரிமைச்சான்று வழங்குவது தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கலெக்டர் கவனத்துக்கு கொண்டு சென்று உரிமைச்சான்று தொடர்பான உத்தரவுகள் மறுபரிசீலனை செய்ய பரிந்துரைக்கப்படும் என்றார்.

    • விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் வழங்கும் முகாம் வருகிற 23-ந் தேதி நடக்கிறது.
    • விருதுநகர் மாவட்டத்திற்கு ரூ.190 கோடி பயிர்க்கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.14.40 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் விருதுநகர் மாவட்டத்திற்கு ரூ.190 கோடி பயிர்க்கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.14.40 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் மானாவாரி பகுதியில் விவசாய பணிகள் தொடங்கி உள்ள நிலையில் விவசாயிகள் பயிர்க்கடன் பெற எதுவாக பயிர்க்கடன் வழங்கும் முகாம் வருகிற 23-ந் தேதி அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நடைபெறுகிறது. கணினி சிட்டா நகல், பயிர் சாகுபடி தொடர்பான கிராம நிர்வாக அலுவலர் அடங்கல் சான்று, மத்திய கூட்டுறவு வங்கி சேமிப்பு கனாக்கு எண், ஆதார் அட்டை நகல், எம்மார்ட் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் அருகாமையிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை விவசாயிகள் தொடர்பு கொண்டு கடன் மனு அளித்து பயனடையலாம்.

    மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் அருகே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிய உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் மனுவை அளித்து கடன் பெற்று பயனடையலாம். பயிர்க்கடன் வழங்கலில் ஏதாவது சேவை குறைபாடுகள் இருந்தால் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் (9489927001) கடன் பிரிவு உதவி பொது மேலாளர் (9489327006), கடன் பிரிவு மேலாளர் (9489927177) என்ற கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    • பயிர்க்கடன் வழங்குவதில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
    • பயிர் சாகுபடியை பொறுத்து கடனை திருப்பி செலுத்தும் அவகாசம், 6, 8 மாதம், ஓராண்டு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    கூட்டுறவுத்துறை சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. ஓராண்டு அவகாசத்துக்குள் திருப்பி செலுத்திவிட்டு அடுத்த 15 நாட்களுக்கு பிறகு மறு சாகுபடிக்கான கடனை பெற்று வருகின்றனர். தற்போது பயிர்க்கடன் வழங்குவதில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    இது குறித்து திருப்பூர் விவசாயிகள் கூறியதாவது:-

    இம்முறை பயிர் சாகுபடியை பொறுத்து கடனை திருப்பி செலுத்தும் அவகாசம், 6, 8 மாதம், ஓராண்டு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் அறுவடை முடிவதற்குள் பயிர்க்கடனை திருப்பி செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்படும். இல்லாவிட்டால் வட்டி சுமை ஏற்படும். விவசாயிகளின் வீடு ஒரு கிராமத்தில் இருக்கும். விளை நிலம் மற்ற கிராமங்களில் இருக்கும்.வீடு இருக்கும் கிராமத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்திலேயே பயிர்க்கடன் பெற்று வந்தனர். இனிமேல் விளைநிலம் உள்ள கிராமத்தில் தான் பயிர்க்கடன் பெற வேண்டும் என்கின்றனர். இது பல்வேறு பாதிப்புகளையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும்.

    எனவே, பழைய முறைப்படி கூட்டுறவுக்கடன் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஒருவர் கூறுகையில்,கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய விதிமுறைகள் எதுவும் அறிவிக்கவில்லை. பழைய கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன. பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கியதில் அரசுக்கு பல்வேறு சவால்களும், நெருக்கடியும் ஏற்பட்டது. அதற்காகவே பழைய விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளன என்றார்.

    • கடன் மனுவை சமர்ப்பித்து பயிர்க்கடன் பெற்று பயன் அடையலாம்.
    • அனைத்து வகையான கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்ட விவசாயிகள் தங்களது ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை, நில உடைமை தொடர்பான சிட்டா, பயிர்க்கடன் தொடர்பான வட்டாட்சியரின் அனுபோக சான்றிதழ் மற்றும் அடங்கல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஆகியவற்றுடன் தங்களது இருப்பிடம் அல்லது விவசாயம் பயிர் சாகுபடி செய்யும் நில அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை உடன் தொடர்பு கொண்டு கடன் மனுவை சமர்ப்பித்து பயிர்க்கடன் பெற்று பயன் அடையலாம்.

    மேலும் வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன், குறைந்த வட்டியில் சுய உதவிக்குழுக்களுக்கான கடன், பிற்படுத்தப்பட்டோர் கடன் மற்றும் சிறுபான்மை யினர் கடன் போன்ற அனைத்து வகையான கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.110 பங்கு தொகை மற்றும் நுழைவுக்கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர்த்து உரிய ஆவணங்களுடன் கடன் மனுவை சமர்ப்பித்து பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயன் அடையலாம்.

    இதில் ஏதேனும் சேவை குறைபாடுகள் இருந்தால் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனரை அல்லது உதவி பொதுமேலாளர், கடன் மேலாளரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

    ×