உள்ளூர் செய்திகள்
புத்தக கண்காட்சி

திருவொற்றியூரில் புத்தக கண்காட்சி 1-ந்தேதி வரை நடக்கிறது

Published On 2022-04-24 09:05 GMT   |   Update On 2022-04-24 09:05 GMT
உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது. இந்த கண்காட்சி வருகிற மே 1-ந்தேதி வரை நடைபெறுகிறது.
திருவொற்றியூர்:

திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே கிளை நூலகம் உள்ளது. இந்த நூலகத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

73 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. மேலும், முதியோர்கள் பிரிவு, கணினி பிரிவு, போட்டித் தேர்வுகள் பிரிவு, காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாத மாற்று திறனாளிகள் பிரிவு உள்ளிட்ட பல சிறப்பம்சங்களுடன் செயல்படுகின்றன.

இங்கு உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது.

இந்த கண்காட்சி வருகிற மே 1-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஏழு பதிப்பகங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

புத்தக தினவிழாவை முன்னிட்டு அனைத்து புத்தகங்களும் 20 சதவீதம் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன. புத்தக கண்காட்சியை திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி. சங்கர், மண்டல குழு தலைவர் தி.மு தனியரசு ஆகியோர் திறந்து வைத்து மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக புத்தகங்களை வழங்கினர். இதில் பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சி கணேசன், கவுன்சிலர் சரண்யா கலைவாணன் உட்பட்ட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News